பெருங்குடலின் முனையில் மிளகாய்போல் நீட்டிக்கொண்டிருக்கும் உறுப்புதான் ‘குடல்வால்’. இன்று இதை உடலுக்கு உதவாத உறுப்பு என்கிறார்கள். ஆனால், முன்னொரு காலத்தில் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கும் உறுப்பாக இது செயல்பட்டது.
காலப்போக்கில் குடல்வாலின் பணியை மற்ற நிணநீர் உறுப்புகள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. அதனால் குடல்வாலுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. பயன்படாத உறுப்பு காலப் போக்கில் மறையும் என்பார்கள். இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு குடல்வால் மறைந்தும் போகலாம், அதுவரை இருந்துவிட்டுப் போகட்டுமே!