Saturday, August 25, 2018

டைம் டிராவல் செய்ய ரெடியா? எகிப்தில் ஸ்டார்கேட் கண்டிபிடிப்பு!



எகிப்து நாட்டின் அபேடாஸ் எனும் இடத்தில் உள்ள சேட்டி 1 கோவில் எப்போது மர்மங்களுக்கு பெயர் பெற்றது. 

இங்கு பழங்கால ஸ்டார்கேட் இருப்பதாகவும், அதன் மூலம் வேறு உலகத்திற்கான நுழைவுவாயில் இருப்பதாகவும் வதந்தி நிலவுகிறது. இந்த மர்மங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக, இக்கோவிலில் உள்ள பல சுவர்களில் விசித்திரமான சிற்பங்கள் உள்ளன. 

ஆனால் அவற்றை எகிப்துநாட்டு ஆய்வாளர்களால் விளக்க இயலவில்லை. இது போன்ற சிற்பங்கள் வேறெந்த கோவில்களிலும் காணக்கிடைப்பதில்லை.

இக்கோவிலில் பல நூற்றாண்டுகளாக ஸ்டார்கேட் எனும் டைம்டிராவல் செய்வதற்கான நுழைவுவாயில் மறைந்துள்ளது என்ற தகவலை இந்த புதிய ஆதாரங்களை நிரூபிப்பதால், அவற்றை ஆராய்ந்து உண்மையான அர்த்தங்களை கண்டறிய வேண்டும்.

அபேடாஸ் கோவில்

அபேடாஸ் கோவில் பழமையான நிலத்தில் உள்ள இடுகாடு எனவும், இது எகிப்தின் மையப்பகுதியில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இன்றைக்கு காணப்படும் அந்த கோவிலானது, மிகவும் பழமையான புனித கோவில் மீது சேட்டி1 ஆல் கட்டப்பட்டது. இதில் பல்வேறு ஆழமான இரகசியங்கள் ஒளிந்துள்ளன. பழங்கால நம்பிக்கையின் படி இந்த அபேடாஸ் கோவில் அடுத்த உலகிற்கு மிகவும் நெருக்கமான புள்ளியாக இருப்பதாக நம்பப்படுகிறது.


மெல்கிசெதேக்

இந்த கோவில் மெல்கிசெதேக் மதகுருக்களின் இல்லமாக திகழ்கிறது. இவர்கள் உண்மையான தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் மற்றும் மற்றவர்களுக்கு சேவைபுரிய அர்பணிக்கப்பட்டவர்கள். இவர்கள் தான் அபேடாஸ் கோவிலில் உள்ள ஸ்டார்கேட்டின் பாதுகாவலர்களாக திகழ்கின்றனர்.

ஸ்டார்கேட்டை திறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இரகசிய விண்வெளி திட்டத்தில், அபேடாஸ் கோவிலில் உள்ள இயற்கையான ஸ்டார்கேட் இராணுவ ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அவர்கள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டாயமாக ஸ்டார்கேட்டை திறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கண்டைன்மென்ட் ரிங்

அந்த இராணுவ ஆய்வில் அந்த கேட்டிற்கு அருகில் 4 பீல்ட் போஸ்ட்களும், ப்ரேஜெக்சன் கருவியும், ஒரு பேரலும், சில கண்டைன்மென்ட் ரிங்-களும் பயன்படுத்தப்பட்டதாகவும், எலெக்ட்ரோமேக்னெடிக் ஆற்றலை பயன்படுத்தி, இயற்கையான ஸ்டார்கேட்டை திறந்து பயன்படுத்தியாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டைம்மிஷன்

அந்த டைம்மிஷன் இயந்திரத்தை அப்படியே பிரதிபலிப்பது போல, கோவில் சுவர்கள் முழுவதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த இறக்கைகளுடன் கூடிய ஒரு வாகனம், 'தி டைம் மிஷன்' படத்தில் வரும் டைம் டிராவல் வாகனத்தை நினைவுபடுத்துகிறது.

சொர்கத்திற்கான வழி

இந்த சுவர் சிற்பங்களை படம்படித்து ,எகிப்திய ஆய்வாளர்களிடம் காட்டிய போது, இது 'இரண்டாம் உலகிற்கான நுழைவுவாயில்' என பதிலளித்தனர். ஆனால் இந்த சுவரில் ஒரு பகுதி மட்டும் முழுவதும் பெயர்த்து எடுக்கப்பட்டது. இதை பார்க்கும் போது, யாரும் இந்த இரகசயத்தை முழுமையாக அறிய கூடாது என்ற நோக்கத்துடன் செய்ததாகவே தோன்றுகிறது. இந்த சுவர் சிற்பங்கள் பற்றிய தகவல்களை உண்மையென்று நிரூபிக்க எந்த வழியும் இல்லாத நிலையில், பல்வேறு அதிக மேம்படுத்தப்பட்ட உள்ளுணர்வாளர்களிடம் இந்த அபேடாஸ் சிற்பங்கள் பற்றி கேட்கப்பட்டது. அவர்களின் கருத்து 'சொர்கத்திற்கான வழி', 'கற்பனைக்கு அப்பாற்பட்டது' என பலதரப்பட்ட நேர்மறை மற்றும் எதிர்மறையாக இருந்தது.

Popular Feed

Recent Story

Featured News