Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 22, 2018

பூமியை போன்று மூன்று புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு..!

அமெரிக்க விஞ்ஞானிகள் குழு, சூரியக் குடும்பத்திற்கு அப்பால் பூமியைப் போல் உயிர் வாழ தகுதியான 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லி ஸெங் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் இதனை கண்டுபிடித்துள்ளனர்.



இந்த ஆய்வானது கெப்ளர் வானியல் தொலைநோக்கி பயன்படுத்தி நடத்தப்பட்டது. அதன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பூமியை விட ஒன்றரை முதல் இரண்டரை மடங்கு வரை பெரிய கிரகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கிரகங்களில் உலகின் எந்த ஒரு உயிரினமும், உயிர்வாழ தேவையான நீர் ஆதாரம் இருப்பதும், அந்த கிரகங்களின் மேற்பகுதியில் நீராவி நிரம்பிய மேகங்கள் கூட்டம் இருப்பதையும், அவர்கள் கெப்ளர் வானியல் தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.



Popular Feed

Recent Story

Featured News