அந்தச் சளியில் இருக்கிற கிருமி ரத்தத்துடன் உடல் முழுக்கச் சுற்றிவிட்டு, எப்போது நுரையீரலுக்கு வருகிறதோ, அப்போது மறுபடியும் வீசிங் பிரச்னை வரும்.
வரப்போகிறது மழைக்காலமும், அதைத் தொடர்ந்து பனிக்காலமும். நெஞ்சுச் சளி, அதன் அடுத்தகட்டமான வீசிங்(மூச்சிரைப்பு), அதற்கும் அடுத்த நிலையான ஆஸ்துமா உள்ளவர்களுக்குக் கடினமான காலங்கள் இவை. நெபுலைஸர்(பஃப்) பயன்படுத்தித்தான் இந்தக் குளிர் மாதங்களை அவர்களால் சமாளிக்க முடியும். பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகள்கூட நுரையீரலில் சளி, வீசிங் என்று அவஸ்தைப்படுவார்கள். குழந்தைகளுக்கு வீசிங் ஏன் வருகிறது, வீசிங் வந்துவிட்டால் அதை எப்படிச் சரி செய்வது. சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் மஹேஸ்வரராவ் சொல்கிறார்.
*குழந்தைகளுக்கு வீசிங் ஏன் ஏற்படுகிறது?*
``இது நுரையீரல் சம்பந்தமான பிரச்னை. நம் நுரையீரலானது வெளிப்புறம் பார்ப்பதற்கு பலூன் மாதிரி இருக்கும். உள்ளே சின்னச் சின்ன காற்று உருண்டைகள், கோடிக்கணக்கில், நெருக்கமாக இருக்கும். கோலிகளை எவ்வளவு அருகருகே வைத்தாலும் அவற்றின் இடையிடையே சின்னச் சின்ன இடைவெளிகள் இருக்கும் இல்லையா. அதேபோல, நுரையீரலின் உள்ளே இருக்கிற காற்று உருண்டைகளின் இடையிலும் முடி நுழைகிற அளவுக்கு மெல்லிய இடைவெளிகள் இருக்கும். நாம் சுவாசிக்கும்போது இந்த இடைவெளிகளுக்குள்தான் காற்று உள்ளே போய் நுரையீரலுக்கு ஆக்சிஜனை கொடுத்துவிட்டு, கார்பன் டை ஆக்சைடுடன் வெளியேறும். பிறகு ஆக்சிஜன், ரத்தத்துடன் கலந்து உடல் முழுக்க எடுத்துச் செல்லப்படும்.
காற்று உருண்டைகள் என்று சொன்னேன் இல்லையா. அவற்றின் இடைவெளிகளில் சளி உருவாகிவிட்டால், முதலில் இருமல், பிறகு மூச்சுவிடக் கஷ்டம், அடுத்தது ஆஸ்துமா என்று வரும். காற்று உருண்டைகளின் இடைவெளிகளில் சளி இல்லாதபட்சத்தில் மூச்சுக் காற்று சுலபமாகச் செல்லும். அங்கே சளி இருக்கிறபட்சத்தில் காற்று சரியாகச் செல்ல முடியாமல் திணறும். அந்த நேரத்தில் குழந்தைகள் கஷ்டப்பட்டு மூச்சுவிடுவார்கள். விளைவு மூச்சு விடும்போது விசில் சத்தம்போல ஒலி எழும்ப ஆரம்பிக்கும். இதைத்தான் மருத்துவர்கள் வீசிங் என்று சொல்கிறோம்.
சரி, நுரையீரலுக்குள் சளி ஏன் வருகிறது?
இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துபோவது. இரண்டாவது காரணம், காற்றில் இருக்கிற மாசு. தொடர்ந்து சத்தான உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறபோது, உடலுக்குத் தேவையான கலோரிகள் கிடைக்காது. அப்போது உடம்பானது தனக்குத் தேவைப்படுகிற சத்தை உடம்பின் செல்களிலிருந்து எடுத்துக்கொள்ளும். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் பலவீனப்படும். இந்த நேரத்தில் காற்றில் இருக்கிற மாசு நுரையீரலுக்குள் செல்லும்போது சட்டென்று நுரையீரலில் தொற்று உண்டாகும். கூடவே சளியும் பிடிக்கும். ஈரப்பதம் சற்று அதிகமானால்கூட தும்மல், இருமல், சளி என்று அவஸ்தைப்பட ஆரம்பிப்பார்கள். தொண்டையிலிருந்து நுரையீரல் வரைக்கும் இறுக்கமாக உணர்வார்கள். இதை, ஆங்கில மருத்துவத்தில் அலர்ஜி என்று சொல்வார்கள்.
*பிறந்த குழந்தைகளுக்கும் வீசிங் வருவதற்குக் காரணங்கள் என்னென்ன?*
* குழந்தை கருவாக அம்மாவின் வயிற்றில் இருக்கும்போது, அதன் அம்மாவுக்கு வீசிங் பிரச்னை இருப்பது
* கர்ப்பமாக இருக்கும்போது தாய் சத்தான உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது
* குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும்போது சைனஸ் மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது...
* குழந்தை, கருவாக இருக்கும்போது உள்ளுறுப்புகளின் வளர்ச்சியிலேயே குறைபாடு ஏற்பட்டிருப்பது... இவற்றைத் தவிர, முதல் ட்ரைமெஸ்டரில், மருத்துவரிடம் ஆலோசிக்காமல் கர்ப்பிணி தாய் ஏதாவது மாத்திரை சாப்பிட்டிருந்தால், அது குழந்தையின் நுரையீரல் வளர்ச்சியைப் பாதிக்கும். இதுவும் பிறந்த சிசுவுக்கு வீசிங் வருவதற்கான முக்கியக் காரணம்தான்.
என்ன தீர்வு?
குழந்தைகளுக்கும் பெரியவர்களைப் போலவே பஃப், ஆன்டி பயாடிக் எல்லாம் இருக்கின்றன. ஆனால், இவற்றால் பிரச்னையை அப்போதைக்குச் சரிசெய்ய முடியுமே தவிர, பிரச்னையின் காரணத்தை மொத்தமாகச் சரிசெய்ய முடியாது. பஃப் எடுத்தால், அதில் இருக்கிற மெடிசின் சளியைக் கரைத்துவிடும். ஆனால், அப்படிக் கரைந்த சளி உடம்பைவிட்டுப் போகாது. கரைந்து ரத்தத்தில் கலந்துவிடும். அந்தச் சளியில் இருக்கிற கிருமி ரத்தத்துடன் உடல் முழுக்கச் சுற்றிவிட்டு , எப்போது நுரையீரலுக்கு வருகிறதோ, அப்போது மறுபடியும் வீசிங் பிரச்னை வரும்.
சளிப் பிரச்னைக்குச் சரியான தீர்வு, வெற்றிலை, கற்பூரவல்லி, துளசி மூன்றும்தான். வெற்றிலை, கற்பூரவல்லி, துளசி மூன்றையும் சமமாக எடுத்துக்கொண்டு வாணலியில் லேசாகச் சூடுசெய்து, பிழிந்து சாறு எடுக்க வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு இந்தக் சாற்றில் ஒரு டீஸ்பூன் எடுத்து, அதில் கால் டீஸ்பூன் சுத்தமான தேன் கலந்து இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை கொடுத்து வந்தால், நுரையீரலில் இருக்கிற சளி மலம் வழியாக வெளியேறிவிடும். பிஞ்சுக் குழந்தை என்றால், நெஞ்சில் கபம் சேர்ந்திருக்கிறது என்பது உறுதியாகத் தெரிந்தால், மேலே சொன்ன கலவையில் ஒரு சொட்டு மட்டும் தொட்டு நடு நாக்கில் தடவி விடுங்கள். இந்தத் தேன் கலவையை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஃபிரெஷ்ஷாக தயாரித்துதான் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
துளசி, நுரையீரலில் இருக்கிற நோய்த்தொற்றைச் சரிசெய்யும்; கற்பூரவல்லி இயற்கை பஃப் என்பதால் நுரையீரலில் இருக்கிற சளியைக் கரைத்து ரத்தத்தில் கலக்காமல் மலம் வழியாக வெளியேற்றும். சளிப்பிடித்த குழந்தைகள் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். சரியாகச் சாப்பிடவில்லையென்றால், சத்து எங்கிருந்து வரும். வெற்றிலை குழந்தைகளுக்குப் பசியையும், செரிமானத்தையும் தூண்டிவிட்டு பிள்ளைகள் உடம்பில் சத்துப்பிடிக்க வைக்கும். உடம்புக்குத் தேவையான சத்துக் கிடைக்க ஆரம்பித்தால், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகும். நுரையீரலில் இருக்கிற தொற்றும் சரியாகும்.''
நன்றி
விகடன்...