Thursday, August 30, 2018

வருமான வரித்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. கணக்கை முடிக்காவிட்டால் அபராதம்.. எச்சரிக்கை!



சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்பதால் வரி செலுத்தாதோர் அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.


நடப்பு ஆண்டு முதல், மாத ஊதியம், மாத ஓய்வூதியம் என, ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல், வருமான வரி உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



வருமான வரியை குறைப்பதற்காக, வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உச்சவரம்புக்கு கீழ் வருமானம் இருந்தாலும், இந்த ஆண்டு, வருமான வரி கணக்கை, கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்கான அவகாசம், நாளையுடன் முடிகிறது. நாளைக்குள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் கட்ட வேண்டி வரும் என, வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.




நாளை நள்ளிரவு 12 மணியை தாண்டி தாக்கல் செய்யப்படும், அனைத்து கணக்குகளுக்கும் அபராதம் விதிக்கப்படும். 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் இருப்போர்,ரூ. 1,000 தாமத கட்டணமும், ஐந்து லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பவர்கள், ரூ.5,000 தாமத கட்டணத்துடன், டிசம்பர் 31க்குள் கணக்கு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News