'மது விற்பனை வருமானம் மூலமே ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக அமைச்சர் கே.சி.வீரமணி கூறுவதைக் கண்டிக்கிறோம்' என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம், அதன் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜவாஹிருல்லா,"நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் இந்தியாவின் பன்முகப் பண்பாடுகளை அங்கீகரித்து உருவாக்கப்பட்டது.
பல்வேறு மத மொழி கலாசார பண்பாடுகளை கவனத்தில்கொண்டு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் வகையில் நமது அரசமைப்புச் சட்டம் அமைந்துள்ளது.