Friday, August 24, 2018

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

நடப்பாண்டு, பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு சார்பில், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. 



நடப்பு கல்வியாண்டில், 437.86 கோடி ரூபாய் செலவில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும், 5.06 லட்சம் மாணவர்கள், 6.49 லட்சம் மாணவியர்; அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் படிக்கும், 18 ஆயிரத்து, 506 மாணவர்; 4,394 மாணவியர் என, மொத்தம், 11.78 லட்சம் பேருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமி, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், நிலோபர் கபில், ராஜலட்சுமி, வளர்மதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Popular Feed

Recent Story

Featured News