Thursday, August 9, 2018

இந்திய அரசியலமைப்பின் சட்ட வளர்ச்சி

அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டு மக்களை ஆட்சிபுரியும் அடிப்படையான அரசியல் முறையாகும். கூறுவதே அந்நாட்டின் அரசியலமைப்பு ஆகும்.
அரசின் தலையாய அங்கங்களாகிய சட்டமியற்றும் சபை நிர்வாகம் நீதித்துறை ஆகியவற்றைத் தோற்றுவித்து அவற்றில் அதிகாரங்களை வரையறுத்து பொறுப்புகளைப் பகுத்து பரஸ்பரம் அவற்றுக்கு இடையேயும் அவற்றுடன் மக்களுக்கும் உள்ள உறவுகளை நெறிப்படுத்துவதே அரசியலமைப்பு ஆகும்.

அரசியலமைப்பு என்பது அரசின் அங்கமாகிய சட்டங்களை இயற்றும் சட்டத்துறை, செயல்படுத்தும் செயல்துறை, சட்டங்களை நிலைநாட்டும் நீதித்துறை ஆகியவற்றின் அமைப்பு, குடிமக்களின் உரிமைகள், கடமைகள்; குடிமக்கள், அரசு – அரசின் அங்கங்கள் ஆகியவற்றிற்கு இடையே நிலவும் தொடர்புகள்; அவற்றை ஒழுங்குபடுத்தும் கொள்கைகள் ஆகியவற்றின் தொகுப்பே ஆகும்.

அரசியலமைப்புச் சட்டங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் இன்றியமையாதது ஆகும். இவை அனைத்துச் சட்டங்களையும்விட மேலாண்மை பொருந்திய முதன்மைச் சட்டங்களாகும்.

இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு

இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது.
இந்த காலத்தில் வெளிநாட்டு ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது.

1934-ல் இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

பின்னர் 1936-இலும் 1939-இலும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, அரசியல் நிர்ணய சபையை உருவாக்கலாம் என கிரிப்ஸ் தூதுக்குழு மார்ச்-1942-ல் பரிந்துரைத்தது.

பின்னர் வந்த அமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946) அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், ஜூலை 1946-ல் நடைபெற்றது.

டிசம்பர் 1946-ல்அரசியல் நிர்ணய சபை கூடியது. அச்சபையின் தலைவராக டிசம்பர்-11, 1946-ல் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947,ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய இந்தியாவானது இந்திய மாகாணம், பாக்கிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய சபை செய்ய வேண்டியதாயிற்று.

இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி

நம் தாய்நாட்டுக்கு 1947 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும் இந்த நாளில்தான் சுமார் 200 ஆண்டுகளாக தொடர்ந்த ஆங்கிலேய ஆட்சி நீக்கப்பட்டு அரசியல் அதிகாரங்கள் இந்திய மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடைத்து.

அமைச்சரவை தூதுக்குழுவின் பரிந்துரைப்படி 1946 ம் ஆண்டு அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது தற்போது நடைமுறையில் உள்ள இந்திய அரசியலமைப்பு 1949 ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் அரசியலைமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் முதன்முதலாக நடைமுறைக்கு வந்தது.

ஆங்கிலேயர் இயற்றிய பல்வேறு சட்டங்களின் வெளிப்பாடே இந்திய அரசியலமைப்புச் சட்டமாகும்.

ஒழுங்கு முறைச் சட்டம் (1773)

இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் ஒழுங்கு முறைச்சட்டம் மிக முக்கியமானது ஏனெனில் இந்தியாவில் கம்பெனி நிர்வாகத்தின் மீது பிரிட்டிஸ் நாடாளுமன்றம் தனது கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதற்கான முதல் முயற்சியாக அச்சட்டம் அமைந்தது. அதன்படி.
இச்சட்டம் கம்பெனி ஆட்சிக்காக எழுதப்பட்ட அரசியல் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் அடங்கிய அரசியலமைப்பு ஒன்றை வழங்கியது.

வங்காள ஆளுநரை முதல் தலைமை ஆளுநராக நியமித்து வாரன் ஹேஸ்டிங் முதல் தலைமை ஆளுநரானார்.

கல்கத்தாவில் ஒரு தலைமை நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
ஜவஹர்லால் நேரு
இந்திய அரசியலமைப்புப் பேரவையின் முதல் கூட்டத்தொடரில், 1946 டிசம்பர் 13 ஆம் நாள், நோக்கத் தீர்மானத்தை, ஜவஹர்லால் நேரு முன் மொழிந்தார்.
இத்தீர்மானம் சில மாறுதல்களுடன் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக அமைக்கப்பட்டது.

1949 அக்டோபர் 17 ஆம் நாள் சிறப்பு வாக்கெடுப்பின் வழியாக அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கமாகியது.
அரசியலமைப்புச் சூழல் ஆராய பல்வேறு குழுக்கள் அமைத்தல்
அரசின் அமைப்பு, ஒன்றிய அரசு, மாநில அரசு இவற்றின் இடையே நிலவக்கூடிய உறவு, அதிகாரப் பங்கீடு, அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் நலம், பழங்குடியினர் நலம், நீதிமன்றம் மற்றும் அரசின் பல்வேறு பரிமாணங்களை ஆய்வதற்குப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்திய அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களே இப்பல்வேறு குழுக்களிலும் இடம் பெற்றிருந்தனர்.
சுதந்திரத்திற்குப் பின் வரைவுக்குழு
1947 ஆகஸ்ட் 27 ஆம் நாள், டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் தலைமையில், அரசியலமைப்பு வரைவுக் குழு அமைக்கப்பட்டது.
என். கோபாலசாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, என். மாதவராவ் ஆகியோர் வரைவுக் குழுவின் உறுப்பினர்களாவர்.

இந்திய அரசியலமைப்பின் ஆதாரங்கள்
1918 – பம்பாய் காங்கிரசு மாநாடு – அடிப்படை உரிமைத் தீர்மானம்
1928 – மோதிலால் நேரு அறிக்கை – அடிப்படை உரிமைகள் – இவற்றில் பத்து உரிமைகள் இன்றைய அடிப்படை உரிமைகளாக உள்ளன. பாராளுமன்ற முறை – சிறுபான்மையினர் நலம்
1931 – கராச்சி மாநாடு – அடிப்படைக் கடமைகள் (42 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்)

1935 – இந்தியச் சட்டம் – இந்திய அரசியலமைப்பில் 60 சதவிகிதப் பகுதி இச்சட்டத்திலிருந்து பெறப்பட்டுள்ளது – ஆளுநர், அவசர காலப் பிரகடனம், மத்திய – மாநில அரசு.

பிரிட்டிஷ் – பாராளுமன்ற முறை, ஒற்றைக் குடியுரிமை, சட்டம் இயற்றுதல்.

அமெரிக்க அரசியலமைப்பு – குடியரசுத் தலைவர், நீதித்துறை சுதந்திரம்,

நீதிப்புணராய்வு, அரசியலமைப்பு முகவுரை தொடக்கம், அடிப்படை உரிமைகள்
.
ஜெர்மனி ரீக் – குடியரசுத் தலைவரின் அவசர காலப் பிரகடனம்

அயர்லாந்து (காந்தியக் – அரசுநெறிக் கோட்பாடுகள் கொள்கை)

இந்திய அரசியலமைப்புப் பேரவை, நீண்ட விளக்க விவாதத்திற்குப் பின்னர், 1949 நவம்பர் 26 ஆம் நாள், அரசியலமைப்பினை ஏற்றுக்கொண்டு, 1950 ஜனவரி 26 ஆம் நாள், இந்திய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தின.
டாக்டர் இராஜேந்திர பிரசாத் முதல் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். இந்நாளைப் போற்றும் வண்ணம் ஜனவரி 26 ஆம் நாளைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகின்றோம்.
இந்திய அரசியலமைப்பு முறை பெறப்பட்ட நாடுகள் மற்றும் கொள்கைகள்
அமெரிக்கா முகப்புரை அடிப்படை உரிமைகள் நீதிப் புணராய்வு நீதிபதிகள் பதவி நீக்கம்முறை சுதந்திர நீதித்துறை
இங்கிலாந்து பாராளுமன்ற முறை பிரதம மந்திரி சட்டம் இயற்றும் முறை சட்டத்தின் வழி ஆட்சி ஒற்றைக் குடியுரிமை
அயர்லாந்து அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் குடியரசுத் தலைவரின் தேர்தல் முறை குடியரசு தலைவரால் இராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர் நியமனம்
கனடா மத்தியில் வலிமையுடன் கூடிய கூட்டாட்சி முறை மத்திய மாநில அரசுக்கு இடையில் அதிகார பகிர்வு மற்றும் எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசிடம் உள்ள நிலை
தென் ஆப்ரிக்கா சட்டதிருத்த முறை
ரஸ்யா அடிப்படைக் கடமைகள் ஐந்தாண்டு திட்டங்கள்
ஆஸ்திரேலியா பொதுப்பட்டியல் மத்திய மாநில உறவுகள்
ஜெர்மனி அவசரநிலை பிரகடனத்தில் போது அடிப்படை உரிமைகள் இடைநீக்கம்
ஜப்பான் உச்ச நீதிமன்றத்தில் ஏற்ப்பட்ட சட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும் முறை
இந்திய அரசியலமைப்பு சட்டம் 1935 (மூன்றில் இரண்டு பங்கு இதிலிருந்து எடுக்கப்பட்டது. கூட்டாட்சி முறை ஆளுநர் பதவி நெருக்கடி கால நிலை

இந்திய அரசியலமைப்பு குறிப்பு
இந்திய அரசியலமைப்பு (Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு,
உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும்.

எழுதப்பட்ட சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சி மற்றும் ஒருமுகத்தன்மை கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது இந்திய அரசியலமைப்பாகும்.
அது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள்,மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது.
இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன.
இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது.
முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26 ஜனவரி 1929, முழு தன்னாட்சி சாற்றல் நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது.

இந்திய அரசியலமைப்பின் கூறுகள்
இந்திய அரசியலமைப்பில் 22 அத்தியாயங்களும்(Chapters) 9 அட்டவணைகளும்(Schedules) (முதலில் 8 அட்டவணைகளே இருந்தன; 1951-ல் 9-ஆவது அட்டவணை சேர்க்கப்பட்டது) 22 அத்தியாயங்களும் 395 பிரிவு (article)களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள், மத்திய நிர்வாகக்குழு, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் ஆகியன பற்றி சொல்லப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு கீழ்கண்ட முகப்புரையுடன் தொடங்குகிறது. இந்தியாவின் மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு சுதந்திரமான, சமுதாயநலம்நாடும், சமயச்சார்பற்ற, சமஉரிமைக் குடியரசு நாடாக அமைக்க மனமார்ந்து முடிவுசெய்து.
அதன் குடிமக்கள் எல்லோருக்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நியாயமும், எண்ணத்தில், வெளிப்பாடுகளில், நம்பிக்கையில், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரமும், சமூகநிலையில் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமும் கிடைக்கச் செய்யவும், ஒவ்வொரு மனிதனின் மதிப்பையும் நாட்டின் ஒருமையையும் முழுமையையும் காக்கும்வண்ணம் அவர்கள் அனைவரிடமும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கவும் நம் அரசியல் அமைப்பு உருவாக்கும் அவையில் இந்த 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளில் இங்ஙனம் இந்த அரசாங்க சாசனத்தை இயற்றி, எங்களுக்கே தந்து, ஏற்றுக்கொள்கிறோம்

Popular Feed

Recent Story

Featured News