அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் அந்தந்தக் கல்லூரிகளில் சென்று சேர புதன்கிழமை கடைசி நாளாகும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் ஆகியவற்றுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதன் முடிவுகள் ஆகஸ்ட் 2 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இடங்களைப் பெற்றவர்கள் அந்தந்தக் கல்லூரிகளில் சென்று சேர ஆகஸ்ட் 8 -ஆம் தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும். மாணவர்கள் சேராத இடங்கள் காலியிடங்களாக கருதப்படும். கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள், மாணவர்கள் சேராமல் கைவிட்ட இடங்கள் ஆகியவை ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாலை அந்தந்த மாநில அரசின் ஒதுக்கீட்டுக்காக சமர்ப்பிக்கப்படும். இடங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் அரசு இடங்களுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.