Monday, August 27, 2018

ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்!


புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஊதிய நிலுவையைக் கேட்டு, பள்ளிக் கல்வித் துறை அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 32 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



“7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். மாதச் சம்பளத்தை தாமதிக்காமல் வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை அலுவலகம் முன்பு இன்று (ஆகஸ்ட் 27) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Popular Feed

Recent Story

Featured News