Tuesday, August 7, 2018

எள் ஊற வைத்த நீரை குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்



இன்று அனைவரும் கடைகளில் பதப்படுத்தி வைக்கப்பட்ட ஜுஸ்களையே விரும்பி அருந்துகின்றனர், இதனால் ஏற்படும் உடல் உபாதைகள் அதிகம்.



எனவே வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரிக்கும் பானங்களை அருந்துவதே ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

எள் விதைகளை ஊற வைத்த நீரில் விட்டமின் பி1, பி2, பி3, பி5 மற்றும் சி சத்துகள் அடங்கி உள்ளன. இதை அன்றாடம் நாம் குடிப்பதால் நாம் பெறும் ஏராளமான நன்மைகளை பற்றி பார்க்கலாம்.


தேவையானவை

எள்- 1 கப்
தண்ணீர்- 3 கப்
செய்முறை

ஒரு கப் எள்ளை எடுத்து கொள்ள வேண்டும், பின்பு அதை மூன்று கப் நீரினை ஊற்றி எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும், அப்படி செய்வதன் மூலம் எள்ளில் உள்ள மொத்த சத்துகளும் நீரில் சேர்ந்து விடும்
நன்மைகள்

அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை அளிக்கும்.
இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் இதை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
கல்லீரல், கணையம் மற்றும் எலும்புகளின் வலுவை அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
செரிமான கோளாறுகளை சரி செய்து செரிமானத்தை அதிகரிக்கும்.
குறிப்பு




எள்ளு ஊற வைத்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்து நான்கு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். மேலும், கரைத்து மட்டுமே குடியுங்கள்.

Popular Feed

Recent Story

Featured News