Thursday, August 30, 2018

விண்வெளியில் புற்றுநோய்க்கு சிகிச்சை!


விண்வெளியில் புற்றுநோய்க்கு சிகிச்சை!
விண்வெளியில் இருந்தபடி புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிப்பதில் நாசா ஆராய்ச்சி மையம் முன்னேற்றம் அடைந்துள்ளது. புற்றுநோய் செல்களை துல்லியமாகப் பரிசோதிக்க முடியும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.



புற்றுநோய்க்கு நிரந்தரச் சிகிச்சை மற்றும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ரத்த செல்களின் பரிசோதனைகளை நாசா நடத்தி வருகிறது.

இது தொடர்பாக நாசா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், மைக்ரோ ஆக்டிவிடி சயின்ஸ் குளோவ்பாக்ஸ் விண்வெளி நிலையத்தில் இருந்தபடி விண்வெளி வீரரான செரீனா அவுன் – சான்ஸலர் புற்றுநோய் சிகிச்சைக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே செரீனா விண்வெளிக்குச் சென்றார். ரத்த நாளங்களின் மேற்பரப்புக்கு இட்டு செல்லும் உயிரணுக்கள் மீதான சோதனைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதனால், இன்னும் சில மாதங்கள் அவர் அங்கே தங்கியிருக்க வேண்டும்.

நாசாவின் கூற்றுப்படி, “பூமியிலுள்ள ஒரு உயிரினத்தின் ரத்தத் திசுக்கள் எப்படிச் செயல்படுமோ, அதைப்போலவே கலாச்சார உணவுகளில் உட்செலுத்தப்படும் நுண்ணுயிரிகள் செயல்படுகின்றன என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், பொதுவாக உடலில் இருந்துகொண்டு செயல்படுவது போலவே சுழலும் செல்கள் நடந்து கொள்கின்றன.

இந்த ஆய்வில் விலங்குப் பரிசோதனைகள் தேவையில்லை என்பதால், இதன் செலவு குறைவு. மிகவும் எளிதானது. இது பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள வாஸ்குலார்-இலக்கு மருந்துகளை உருவாக்க உதவுகிறது.



புற்றுநோய் ஆராய்ச்சியில் கீமோதெரபி சிகிச்சைக்கான செல்களைத் துல்லியமாகப் பரிசோதிக்க முடியும் என நம்பும் நாசா, இந்தச் சோதனையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News