Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 31, 2018

"பல்"நோய்களுக்கு ஏற்ற எளிய மருத்துவ முறைகள்!

பல்வலி வராமல் இருக்க ;* பாக்குக் கொட்டையை சுட்டு சாம்பல் ஆக்கி பொடி செய்து அத்துடன் காசுகட்டி இலவங்கபட்டை சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் நோய் வராது. பல் ஒளி வீசும்.

நகச்சுற்று ;
மஞ்சள்,அருகம்புல்,சுண்ணாம்பு கலந்து பூசிவர குணமாகும்.

பல்லில் சீழ்வடிதல் :* பிரமதண்டு இலை எரித்து சாம்பல் வைத்து பல்தேய்த்து வர பல்லில் சீல்வடிதல் குணமாகும்.



பல் நோய் குணமாக:* புதினா இலையை காயவைத்து சம அளவு உப்பு சேர்த்து மீண்டும் அரைத்து தூளாக்கி காலை,மாலை பல்துளக்கி வந்தால் பல்கூச்சம் நீங்கும்.

பல்நோய் வராமல் தடுக்க ;* பூந்தி கொட்டை, உப்பு சேர்த்து வறுத்து பல் பொடியில் சேர்த்து பல்தேய்க்க பல் நோய் வராது.

பல் ஆட்டம் குணமாக ;* வாழைமர பட்டையை கரியாக்கி பொடி செய்து பல் தேய்த்து வர பல் ஆட்டம் குணமாகும்.

பல் சொத்தை நீங்க :* பிரமதண்டு இலை சுட்டகட்ட சாம்பலால் பல் தேய்த்து வர பல்சொத்தை நீங்கும்.

பல்சொத்தை நீங்கி மீண்டும் எனாமல் உண்டாக :* புங்கம்பட்டையை இடித்து தூளாக்கி நீர் விட்டு கொதிக்க வைத்து காய்ச்சி அதன் பின் 250 மி.லி நல்லெண்ணை 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி புங்கன் கஷாயத்தை கலந்து சூடாக்கவும் . இதை தினசரி 2 வேளை 1 கரண்டி வாயில் போட்டு 2 நிமிஷங்களுக்கு பின் கொப்பளித்து வரவும்.



Popular Feed

Recent Story

Featured News