- சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரிய கோள் வியாழன்தான். பூமியைவிட 318 மடங்கு பெரிது வியாழன்.
- இருப்பதிலேயே மிகவும் வேகமாகச் சுழலும் கிரகம் வியாழன்.
- வியாழனைச் சுற்றி நமக்குத் தெரியும் அழகிய மேகமும் சுழல்களும் 50 கி.மீ. தடிமனானவை. அவை அனைத்துமே அம்மோனியாவால் உருவானவை. அதற்குக் கீழே ஹைட்ரஜன், ஹீலியம் மட்டுமே முழுவதும் நிறைந்திருக்கும்.
- வியாழனின் காந்தப் புலம் பூமியைவிட 14 மடங்கு சக்தி வாய்ந்தது.
- வியாழனுக்கு மொத்தம் 67 நிலாக்கள்.
- சூரியன், நிலா, வீனஸ் ஆகியவற்றுக்கு அடுத்ததாக, வானத்தில் பிரகாசமான பொருள் வியாழன்.
- அனைத்துக் கோள்களைவிடவும், மிகவும் குறுகிய நாளைக் கொண்டது வியாழன். வியாழனில் ஒரு நாள் என்பது 9 மணி நேரமும் 55 நிமிடங்களும்.
- வியாழன் சூரியனை 11.8 ஆண்டுகளில் முழுமையாகச் சுற்றி வருகிறது.
- ஏழு முறை விண்கலங்கள் வியாழனுக்குச் சென்றுள்ளன.
- வியாழனில் தெரியும் அந்த சிவப்பு நிறப் புள்ளி ஒரு பெரும் புயல். கடந்த 350 ஆண்டுகளாக அந்தப் புயல் நிலவிவருகிறது. அது எவ்வளவு பெரியது தெரியுமா? மூன்று பூமியை அதனுள் அடக்கிவிடலாம்.