Thursday, September 6, 2018

பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் ஒருமாதத்திற்குள் வினியோகம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பிளஸ் 1 வகுப்பிற்கு பாடப்புத்தகங்களை ஒரு மாதத்தில் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (நீதித்துறை), &'தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பில் தமிழ் அல்லாத பிறமொழி பாடப்பிரிவு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கவில்லை. செப்., இரண்டாவது வாரத்தில் காலாண்டு தேர்வு துவங்க உள்ளது. பிறமொழி பாடப் புத்தகங்களை வழங்க தலைமைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,&'என மனு தாக்கல் செய்தார்.நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.

தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்: பிளஸ் 1 ஐ தவிர முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து பாடப் புத்தகங்களும் மார்ச், ஏப்ரலில் வினியோகிக்கப்பட்டது. பிளஸ் 1 ஐ பொறுத்தவரை மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, அரபிக் ஆகிய பாடப்புத்தகங்கள் ஜூன் 15 ல் வழங்கப்பட்டது.

சமஸ்கிருதம், ஹிந்தி, பிரெஞ்ச், ஜெர்மன் பாடப்புத்தகங்கள் செப்.,15க்குள் வழங்கப்படும். அப்புத்தகங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, என்றார்.நீதிபதிகள்: பிளஸ் 1 க்கு அனைத்து பாடப்புத்தகங்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, பைசல் செய்தனர்.

Popular Feed

Recent Story

Featured News