உடல் பருமன் என்பது இந்த காலத்தில் மிகப்பெரிய பிரச்னையான உருவெடுத்துவிட்டது. இந்த எடையைக் குறைக்க ஏன் எல்லோரும் படாத பாடு படுகிறார்கள் உடல் பருமன் உடலில் தோன்றும் மற்ற எல்லா வகையான வியாதிகளுக்கும் அடிப்படையாக இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக, உலகையே அச்சுறுத்துகின்ற, பரவலாக எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நோயான சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு உண்டாவதற்கு மிக மிக அடிப்படையாக இருப்பது இந்த உடலில் தேங்கும் கொழுப்புகள் தான்.
கொழுப்பை கரைத்தல் அவற்றை அறுவை சிகிச்சை என தேவையில்லாத விபரீத விளையாட்டுக்கள் மூலம் குறைப்பது, மற்றும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு உணவுகளையும் சாப்பிடுவதைத் தடுப்பதை விட்டுவிட்டு, ஆரோக்கியமான முறையில் எளிமையாக வீட்டிலேயே உடலில் கொழுப்பு தங்ககாமல் இருக்க சில வழிமுறைகள் உண்டு. அதில் மிக முக்கியமான ஒன்று தான் கீழ்வரும் அருமையான பானம். அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.
கொழுப்பை கரைக்கும் பானம் தேவையான பொருள்கள் - மிளகாய் பொடி - 1 ஸ்பூன் தேன் - 4 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன் செய்முறை ஒரு லிட்டரில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடி, 4 ஸ்பூன் தேன் மற்றும் அதனுடன் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறினைக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தாகம் எடுக்கும்போதெல்லாம் நாள் முழுக்க எப்போதும் இதை குடித்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் தண்ணீரும் குடிக்கலாம்.