Friday, September 21, 2018

இருளுகிறது தமிழகம்?! 14 நாட்கள் மின்வெட்டு! அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் மின்னுற்பத்தி குறைந்துள்ள நிலையில் நிலக்கரிக்கு தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது. காற்றாலை மின்னுற்பத்தி குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அமலுக்கு வரும் நிலை உருவானது.

ஏற்கனவே தமிழகத்தில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதாக மக்கள் கொந்தளிப்பில் உள்ளார்கள். இந்நிலையில் திருநெல்வேலியில் ஒருநாளைக்கு 9 மணி நேரம் வீதம் மொத்தம் 14 நாட்களுக்கு 126 மணி நேரங்கள் மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரி மின்வெட்டு இருக்கும் எனவும், பாளையங்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் மின்சார வாரியம் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகம் முழுவதும் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News