அகில இந்திய நுழைவுத்தேர்வான ஜெஇஇ மெயின் (JEE Main) தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 30ந்தேதி கடைசி நாள். தேர்வை எழுத விரும்பும் பிளஸ்2 படித்து வரும் மாணவ மாணவிகள் உடனே விண்ணப்பியுங்கள். இன்னும் 2 நாட்களே உள்ளன.
ஐஐடி, ஐஐஎஸ்சி. என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் சம்பந்தமான சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு மத்திய அரசால்நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்வில், முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி. போன்ற மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும் ஆனால், ஐஐடி-யில் சேருவதற்கு அடுத்த கட்ட தேர்வான ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
இதுவரை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தி வந்த இந்த தேர்வை, இந்த கல்வியாண்டு முதல் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், தேசிய தேர்வு முகமை அமைப்பு நடத்த இருக்கிறது.
இந்த தேர்வு எழுத விரும்பும் மாணவ மாணவிகள் வரும் 30ந்தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஜேஇஇ முதல் தேர்வு வரும் ஜனவரி மாதத்திலும், 2-வது தேர்வு ஏப்ரல் மாதத்திலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஜனவரி 6 முதல் 20-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக ஆன்லைனில் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது நடந்துகொண்டிருக்கிறது.
தேர்வெழுத விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் www.nta.ac.in என்ற தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தை பயன்படுத்தி செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வு மையம் உள்ளிட்ட முழு தகவல்களும் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பிளஸ் 2 படித்துவரும் மாணவ மாணவிகளே உடனே விண்ணப்பிக்க தயாராகுங்கள்.