Saturday, September 15, 2018

20 ஆண்டு கழித்து உண்மைத் தன்மை தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கவலை

பணியில் சேர்ந்து 20 ஆண்டு கழித்து, கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத் தன்மை சான்று கேட்பதால் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியர்கள் 10 ஆண்டு பணி முடித்தால் தேர்வுநிலை, 20 ஆண்டு முடித்தால் சிறப்பு நிலை வழங்கப்படுகின்றன. 



அதற்கேற்ப ஊதிய உயர்வும் அளிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு, அந்தந்த வட்டார கல்வி அலுவலர்களே வழங்கி வந்தனர்.

சமீபத்தில் கல்வித்துறையில் செய்த நிர்வாக சீர்த்திருத்தத்தால் அந்த அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வழங்கப்பட்டது. மேலும் தேர்வுநிலை, சிறப்புநிலை கேட்டு விண்ணப்பிப்போருக்கு கல்வி சான்றுகளின் உண்மைத் தன்மை சான்று கேட்கப்படுகின்றன.

பணியில் சேர்ந்து 20 ஆண்டுகள் கழித்து, கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத் தன்மை சான்று கேட்பதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஆசிரியர்கள் கூறியதாவது: பணியில் சேரும்போதே கல்விச்சான்றுகளின் உண்மைத் தன்மை அறியப்படுகிறது. 



இதனை பணிப்பதிவேட்டில் பதிய வேண்டும். ஆனால் அதை அதிகாரிகள் பதிவு செய்யாமல்விட்டு, விட்டு, 20 ஆண்டுகளுக்கு பின் உண்மைத் தன்மை சான்று கேட்கின்றனர். மேலும் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்வதால், தேவையில்லாத தாமதம் ஏற்படுகிறது, என்றனர்.

Popular Feed

Recent Story

Featured News