Thursday, September 20, 2018

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.09.18

திருக்குறள்

வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்.

விளக்கம்:



தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

பழமொழி

Coming events cast their shadows before

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

இரண்டொழுக்க பண்பாடு

1. எண்ணெய் பொருட்களை அதிகம் உண்ணாமல் தவிர்த்திடுவேன்.

2. எனக்கு ஏற்படும் சிறு உபாதைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காண முயல்வேன்.

பொன்மொழி

ஒன்றை பெற வேண்டும் என்று நினைத்து விட்டால் இறுதி வரைக்கும் போராடு .... விளைவுகளையோ, அதில் ஏற்படும் தோல்வி பற்றியோ கூட கவலைப்படாதே!!
- விவேகானந்தர்

பொது அறிவு

1.தாவரங்களின் வளர்ச்சியை
அளவிட உதவும் கருவி எது?



கிரிஸ்கோகிராப்

2. தமிழ்நாட்டில் நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது?

ஆடுதுறை (தஞ்சாவூர் மாவட்டம்)

English words and Meanings

Humble. தாழ்மையான
Hub. மையமாக
Herbal. மூலிகை
Hurricane சூறாவளி
Heal. குணமடை

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

*புதினா*

1.ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.

2.பசியைத் தூண்டுகிறது.

நீதிக்கதை

நாய் வால் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்­கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?

இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது...

நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.



இந்த மனிதனை இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.

விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

இன்றைய செய்திகள்

20.09.18

* மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 62-ஆவது நாளாக நூறு அடிக்கும் மேலாக நீடிக்கிறது.

* தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

* மகாராஷ்டிர மாநிலம், மரத்வாடா மற்றும் விதா்பா பகுதிகளில் உள்ள 17 மாவட்டங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

* இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சீன ஓபன் முதல் சுற்றில் டென்மார்க் வீரரை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.



* இலங்கையுடனான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Popular Feed

Recent Story

Featured News