Friday, September 7, 2018

இஸ்ரோ ஒரே ஆண்டில் 22 செயற்கைகோள்கள் ஏவ திட்டம் !

இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் அறிவியலின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துக்கொண்டு இருக்கும் இஸ்ரோ (ISRO) தன்னுடைய புதிய இலக்கை நிர்ணயித்து உள்ளது. அதன்படி குறைந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து பல செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோ தனது முதல் முயற்சியை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளது.

இந்திய செயற்கைகோள்கள் 45 விண்ணில் வெற்றிகரமாக வளம் வரும் நிலையில், வரும் ஆண்டில் மேலும் 22 செயற்கை கோள்களை விண்ணில் ஏவ திட்டமிடபட்டுள்ளது. அவற்றில் 19 செயற்கை கோள்கள் இன்னும் 7 மாதங்களுக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 30 நாட்களுக்குள் 2 செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோ முடிவுசெய்துள்ளது. இந்திய செயற்கை கோள்களை தாண்டி UK, பிரான்ஸ் போன்ற நாடுகளின் செயற்கை கோள்களையும் இந்த திட்டத்தின் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது.

PSLV C42 இன் வெளியீட்டை தொடர்ந்து இந்த வருடம் செப்டம்பர் 15ல் இருந்து இந்த சேவை தொடங்கப்படும் சிவன் கூறியுள்ளார். இஸ்ரோவின் இந்த புதிய திட்டத்தில் மூலம் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படவுள்ள
செயற்கை கோள்கள்:




1. UK யின் நோவாசர் மற்றும் S14.
2. ஆக்டோபரில் கிராமப்புறங்களின் டிஜிட்டல் இணைப்பிற்காக GSAT-29யை சுமந்து செல்லும் GSLV MKIII-D2 வெளியிடப்படும்.
3. மேலும் ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமெராக்கள் கொண்டு விண்வெளியில் புகைப்படங்கள் பிடிக்க PSLV C43 அக்டோபர் ஏவப்படும்.

4. இந்திய விமானப்படைக்கு பயன்படும் GSLV F11 மற்றும் GSAT-7Aயுடன், பிரெஞ்சு கியானாவின் செயற்கைக்கோளை சுமந்து செல்லும் GSAT-11உம் சேர்த்து 3 செயற்கோள்கள் நவம்பரில் ஏவப்படும்.
5. டிசம்பர் மாதம் PSLV C44ஐ விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

செயற்கை கோள்களின் தேவை நம் நாட்டிற்கு உள்ளதால் இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிலைமை உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News