Thursday, September 13, 2018

28,000 அரசுப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம் : அரசாணை வெளியீடு

தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் செயல்படும் 28 ஆயிரத்து 263 பள்ளிகளுக்கு சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது

2018-19ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் (சமக்ர சிக்ஷா) மாநில திட்ட இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்



நடப்பு 2018-19ம் ஆண்டு வரைவுத் திட்ட ஒப்புதலில் 31,266 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.97.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ஆனால், ஆண்டு வரைவுத் திட்ட ஒப்புதலில் 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள 28 ஆயிரத்து 263 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும் ரூ.89.67 கோடி மாவட்ட வாரியாக விடுவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டிருக்கும் அரசு ஊராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு, வனத்துறை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த மானியம் வழங்கப்பட வேண்டும்

இந்த பள்ளி மானியத் தொகையில் 10 சதவீதம் முழு சுகாதார திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும். மற்ற மானியத் தொகையை திட்ட விதிமுறைகளின்படி பயன்படுத்த வேண்டும்



மேற்கண்ட ஒதுக்கீட்டின்படி 15 முதல் 100 மாணவர்கள் உள்ள பள்ளிகள் (21378) ரூ.25 ஆயிரம், 101-250 உள்ள பள்ளிகள் (6157) ரூ.50 ஆயிரம், 251-1000 உள்ள பள்ளிகளுக்கு (711) ரூ.75 ஆயிரம், 1000 மேல் உள்ள பள்ளிகளுக்கு(4) ரூ.1 லட்சம் பயன்படுத்த வேண்டும்

இந்த நிதியில் பள்ளி வளாகத்தில் அனைத்து கழிப்பறைகளும் உடனடியாக சரி செய்யப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டில் இருக்க வேண்டும்

மேலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட வேண்டும். பழுதடைந்த கணினி பழுதுபார்ப்பது அல்லது புதிய கணினிகளை வாங்குவது போன்றவை செய்ய வேண்டும்

பள்ளி மானியத் தொகை பள்ளி மேலாண்மை குழுவுக்கு வழங்க வேண்டும். வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் வட்டார அளவில் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் பதிவேடு பராமரிக்க வேண்டும்



மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் மானியம் வழங்கப்பட்டது மற்றும் பொருட்கள் வாங்கப்பட்டதையும் கண்காணிக்க வேண்டும்

Popular Feed

Recent Story

Featured News