Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 15, 2018

2 மாநகராட்சி பள்ளிகள் தத்தெடுப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups




அமெரிக்க தமிழ் சங்கம் மற்றும் ஸ்ரீவாரி அறக்கட்டளை இணைந்து சென்னை மாநகராட்சி பள்ளிகள் இரண்டை தத்தெடுத்துள்ளன.

சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா முன்னிலையில், சென்னை மயிலை வீரபெருமாள் கோயில் தெரு மாநகராட்சி தொடக்கப் பள்ளி, காரணீஸ்வரர் பகோடா தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகியன தத்தெடுக்கப்பட்டன. 

இதன்மூலம் அப்பள்ளிகளின் வகுப்பறைகளை மேம்படுத்துதல், கணினி கல்வி தரத்தை உயர்த்துதல், ஆசிரியர்களின் திறனை உயர்த்துதல், மாணவியருக்கு சானிட்டரி நாப்கின் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.



இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வி. சரோஜா, அரசுப் பள்ளிகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிக அளவில் தத்து எடுக்க முன்வர வேண்டும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிக அளவில் பங்கேற்று தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை பெற்றுத்தர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

விழாவுக்கு மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ் தலைமை வகித்தார். அதிமுக எம்.பி.க்கள் வ.மைத்ரேயன், ஜெ.ஜெயவர்தன், எழுத்தாளர் சிவசங்கரி, அமெரிக்கா தமிழ் சங்கத் தலைவர் பிரகாஷ் எம்.ஸ்வாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Post Comments

Popular Feed

Recent Story

Featured News

Back To Top