Tuesday, September 18, 2018

பி.எஸ்.எல்.வி.-சி 42 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு




தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பி.எஸ்.எல்.வி.-சி 42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


நமது நாட்டிலேயே இஸ்ரோ சார்பில் வணீக ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நோவா எஸ்.ஏ .ஆர் மற்றும் எஸ் 1-4 ஆகிய செயற்கைகோள்கள்  அனுப்பப்பட்டதுடன் கடல்சார் ஆராய்ச்சி ,கப்பல்  போக்குவரத்து கண்காணிப்பு ,பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு பயன்களுக்கு உதவும் என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.



பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பி.எஸ்.எல்.வி.-சி 42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு   வண்ண பலூன் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Popular Feed

Recent Story

Featured News