Saturday, September 22, 2018

500 பள்ளிகளை மூட அரசு கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

தமிழகம் முழுவதும், 500 அரசு பள்ளிகளை குறைக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன.



500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைப்படி, 31 ஆயிரத்து, 266 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.

இவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசிடமிருந்து, தமிழக அரசு, நிதியுதவி கேட்டுள்ளது.அப்போது, ஒரு ஆசிரியருக்குகுறைந்த பட்சம், 30 மாணவர்கள் என்ற விகிதத்தில், பள்ளிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.

இதன்படி கணக்கிட்டதில், 826 பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட, ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. மாணவர் எண்ணிக்கை, 1,053 பள்ளிகளில், மிக குறைவாக உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.



மாணவர் குறைந்த 1,053 பள்ளிகளையும், தலா இரண்டு அல்லது மூன்று பள்ளிகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என
மத்திய அரசுக்கு, தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதன்படி, தற்போது இயங்கும் பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள, 500 பள்ளிகள் மூடப்படும் என தெரிய வந்துள்ளது

Popular Feed

Recent Story

Featured News