தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி
மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் தேவை என்பதால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அரசுப் பள்ளி மற்றும் அரசுக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 412 பயிற்சி மையங்களில் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி இலவச வகுப்புகள் தொடங்கும் என்றும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 3 ஆயிரம் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படும் நீட் பயிற்சி வகுப்புகளில் நீட் வழிகாட்டி கையேடு, நோட்டுகள் ஆகியவை இலவசமாகவே வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.