Tuesday, September 4, 2018

இந்திய முறை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க நாளை கடைசி







சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாளாகும்.

சித்த மருத்தும், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய முறைப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 

இதற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 14 -ஆம் தேதி தொடங்கியது. இந்தப் படிப்புகளுக்கு தமிழகத்தில் சென்னையில் 3 கல்லூரிகள், திருமங்கலம் (மதுரை), பாளையங்கோட்டை, கோட்டார் (நாகர்கோவில்) ஆகிய இடங்களில் தலா ஒரு கல்லூரி என மொத்தம் 6 அரசு கல்லூரிகள் உள்ளன. 

இக்கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. இதுதவிரwww.tnhealth.org என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



3,000 விண்ணப்பங்கள்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதுவரை விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இணையதளத்திலும் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விண்ணப்பங்களைப் பெறுவதற்கு செப்டம்பர் 5-ஆம் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 3 மணி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே தேதியில் (செப்.5) மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News