Join THAMIZHKADAL WhatsApp Groups

நன்னாரி : நம் உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை வடிகட்டி, வெளியேற்றும் பணியைச் சிறுநீரகற்கள் செய்கின்றன.
சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் படிவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது இந்தக் கற்கள் தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன.
அரைக் கைப்பிடி நன்னாரி வேரில் நீர் சேர்த்துக்காய்ச்சி வடித்து அதில் கால் ஸ்பூன் கடுக்காய்த்தூள் சேர்த்து உண்ணலாம்.
கால் ஸ்பூன் வெந்தயம் பொடியில் பன்னீர் சேர்த்து அருந்தலாம்.
ஒரு பங்கு கொள்ளுடன் 10 பங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி நீரை வடித்துக் குடிக்கலாம்.
அரை ஸ்பூன் சீரகப் பொடியை இளநீரில் கலந்து உண்ணலாம்.
அரைக்கைப்பிடி அளவு எலுமிச்சை, துளசியை எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
ஒரு கிராம் முருங்கை வேர்ப்பட்டைப்பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.
சேர்க்க வேண்டியவை :-
தர்பூசணி, நாவல், வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை, பப்பாளி, கேரட், சுரைக்காய், பீக்கங்காய், மஞ்சள் பூசணி, வெள்ளபூசணி, வெங்காயம் வெள்ளாரி ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர்.
தவிர்க்க வேண்டியவை :-
பிளம்ஸ், தக்காளி, உருளை, பீன்ஸ், முட்டைக்கோஸ், முந்திரி, பால் பொருட்கள் இறைச்சி, மீன், முட்டை.