அபூர்வ மூலிகையை கொண்டு சிறுநீரக கல்லை கரைக்கும் நாட்டு மருத்துவ முறை!"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று நம் முன்னோர்கள் சொல்லி சென்று விட்டனர். நாம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும் அப்படி வைத்துக்கொள்ளாவிட்டால் நமது உடல் நோய்களின் உடல் ஆகிவிடும்.
சிறுநீரக கல் எப்படி உருவாகிறது
வேர்வையினாலும், சாப்பிடக்கூடிய உணவு மூலமாகவும் தங்கிய உப்பு, கல்லீரலிலும், சிறுநீரகத்திலும் தங்கிவிடுவதால் கல் அடைப்பு ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தில் சிறிய கல் தங்கினால் சிறுநீர் கழிக்கும் பொது மிகவும் எரிச்சலாக இருக்கும். சிறுநீர் வெளியே வரும் போது உயிரே போகும் படி இருக்கும். சிறிய கல்லிற்கே இப்படி என்றால் பெரிய கல் என்றால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. சில சமயங்களில் கல் பெரிதாக இருந்தால் அறுவைசிகிச்சை வரை எடுத்து சென்று விடும். அந்த அளவிற்கு இந்நோய் நம்மை ஆட்டிப்படைக்கும். சிறுநீரக கல்லை அபூர்வ மூலிகையான இரணகள்ளி இலையை கொண்டு கரைக்கலாம்.
காலை எழுந்தவுடன் பல் துலக்கிய பிறகு இரணகள்ளி இலையை வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். அதாவது தினமும் காலை ஒரு இலையை உண்ணவேண்டும். இந்த இலை புளிப்பு சுவை கொண்டது. முதல் நாள் ஒரு கொழுந்து இலையை உண்ண வேண்டும். பின்பு அடுத்த நாள் அதை விட பெரிய இலையாக உண்ண வேண்டும். அதற்கு அடுத்த நாள் சென்ற இலையைவிட பெரியதாக உண்ண வேண்டும். இப்படியே படிப்படியாக பெரிதாக இருக்கும் இலையை உண்ண வேண்டும். ஒரு வாரம் இந்த இலையை உண்ண வேண்டும். உண்ட பிறகு, கண்டிப்பாக ஒருமணி நேரத்திற்கு தண்ணீர் தவிர எதையும் பருகவோ உண்ணவோ கூடாது. இதை செய்தால் எப்பேர் பட்ட கல்லும் எளிதாக கரைந்து விடும். இதை உண்பதால் எந்த பக்கவிளைவுகளும் வராது முற்றிலும் இயற்கை மருத்துவமே.
இரணகள்ளியின் இதர பயன்கள்