Saturday, September 22, 2018

நீட், ஜே.இ.இ. தேர்வு: ஐஐடி பேராசிரியர்களின் விடியோ வகுப்புகள் வெளியீடு

நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஐஐடி பேராசிரியர்கள், நிபுணர்களின் விடியோ வகுப்புகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது.



நீட், ஜே.இ.இ., நெட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை என்.டி.ஏ. வசம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. அதன்படி, 2019 -ஆம் ஆண்டில் முதல்கட்டமாக நடத்தப்பட உள்ள நெட், ஜே.இ.இ. (முதல்நிலை) தேர்வு அறிவிப்புகளை என்.டி.ஏ. அண்மையில் வெளியிட்டது.

இதில் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாளாகும். இதுபோல ஜே.இ.இ. (முதல் நிலை) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கும் செப்டம்பர் 30 கடைசி நாளாகும். அடுத்து நீட் தேர்வுக்கான அறிவிப்பை என்.டி.ஏ. வெளியிட உள்ளது.



இந்த நிலையில், ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வெழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், பாடவாரியான விடியோ வகுப்புகள் மற்றும் சொற்பொழிவுகளை என்.டி.ஏ. அதன் www.nta.ac.in. என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஐஐடி பேராசிரியர்கள், பாட நிபுணர்கள் ஆகியோரின் வகுப்புகள் மற்றும் சொற்பொழிவுகள் பாடவாரியாக இடம்பெற்றுள்ளன.

Popular Feed

Recent Story

Featured News