Monday, September 24, 2018

மாரடைப்பை முற்றிலும் தடுக்க தினமும் உண்ண வேண்டிய உணவுப் பொருட்கள்

இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாயில் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். அத்தகைய மாரடைப்பை முற்றிலும் தடுக்க உதவும் சில சிறந்த ஆயுர்வேத பொருட்களைப் பற்றி பார்ப்போம்.



இஞ்சி

நெஞ்சு எரிச்சலை குறைக்க இஞ்சி பெரிதும் உதவுகின்றது. எனவே நெஞ்சு எரிச்சல் ஏற்படும் காலங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் மாரடைப்பை தவிர்த்து விடலாம்.

தண்ணீர்

தினமும் குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீரை குடித்து வருவது இரத்தத்தின் அமிலங்களை தள்ளும் சக்தியையும் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கவும் உதவி செய்யும்.

ஆரஞ்சு

வைட்டமின் சி அதிகளவில் கொண்டுள்ள ஆரஞ்சுப் பழங்கள் குறைவான கொழுப்பினை கொண்டிருக்கிறது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிட்டு, இதயக் குழாய்களை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளலாம்.





பீன்ஸ்

பீன்ஸில் அதிக அளவில் ஃபோலிக் அமிலம் உள்ளது. தினமும் ஒரு கப் பீன்ஸ் சாப்பிடுவது, இதயத்தை பாதுகாப்பாக வைக்க உதவும்.

செர்ரி பழங்கள்

இரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் இருப்பது மாரடைப்பிற்கு வழி வகுக்கும். தினமும் செர்ரி பழங்களை காய வைத்தோ அல்லது பழச்சாறாக பிழிந்தோ சாப்பிட்டு வந்தால் இதயத்தை பாதுகாக்கலாம்.



பூண்டு

பூண்டு கொழுப்பினைக் குறைக்கும் அற்புத பொருளாகும். மேலும் . இது ஹார்மோன்களின் வேகத்தை அதிகரிப்பதுடன், அழுக்கான இரத்தத்தையும் சுத்தப்படுத்துகிறது.

மீன்

ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்களை அதிகமாக சேமித்து வைத்திருக்கும். வாரத்திற்கு இருமுறை ஹாலிபுட், காட் மற்றும் சால்மன் வகை மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வது இதயப் பராமரிப்பிற்கு மேம்படுத்த உதவும்.





உறக்கம்

இரவில் நீண்ட நேரத் தூக்கம் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை முறையாக பராமரிப்பதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஓட்ஸ்

காலை நேரங்களில் அதிக நார்ச்சத்துடைய உணவுகளான ஓட்ஸ் சேர்த்துக் கொள்வது உடல் வலிமையை அதிகரிக்கும்.

ஆளி விதைகள்

ஆளி விதைகள் நார்ச்சத்தையும், உடலுக்கு தேவையான கொழுப்புகளையும் சேமித்து வைத்துள்ள கொள்வதால் இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

Popular Feed

Recent Story

Featured News