Wednesday, September 26, 2018

சளித்தொல்லையைப் போக்கும் தூதுவளை சூப்!




தினமும் அரிசியைத் தவிர்த்துக் காய்கறி, பழங்கள், கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது. 

இப்போது மழையும் வெயிலும் மாறிமாறி வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே சளி பிடிக்கும். சளி பிடிக்காமல் பார்த்துக்கொள்வதற்கு இந்தத் தூதுவளை சூப்பை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடுவது நல்லது. வருமுன் காக்கும் சிறந்த மருந்து இந்தத் தூதுவளை. தூதுவளையை சூப்பாக வைத்துச் சாப்பிடுவது எப்படி என இன்னிக்கு பார்க்கலாம்.

தினமும் அரிசியைத் தவிர்த்துக் காய்கறி, பழங்கள், கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது. இப்போது மழையும் வெயிலும் மாறிமாறி வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே சளி பிடிக்கும். சளி பிடிக்காமல் பார்த்துக்கொள்வதற்கு இந்தத் தூதுவளை சூப்பை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடுவது நல்லது. வருமுன் காக்கும் சிறந்த மருந்து இந்தத் தூதுவளை. தூதுவளையை சூப்பாக வைத்துச் சாப்பிடுவது எப்படி என இன்னிக்கு பார்க்கலாம்.





தேவையான பொருட்கள்

தூதுவளை இலைகள் - 20

கொத்தமல்லித் தழை - சிறிது

சின்ன வெங்காயம் - 5

சீரகம் - கால் டீஸ்பூன்

முழு பூண்டு - 4 பற்கள்

நெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்





செய்முறை

முதலில் கொத்தமல்லித் தழை, தூதுவளை இலையை நன்றாகச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அதன்பின், பூண்டு, வெங்காயத்தைத் தோல் நீக்கி வைக்கவும்.

வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் சீரகம் தாளித்து பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, கொத்தமல்லித் தழை, தூதுவளை இலையைப் போட்டு 5 நிமிடங்கள் நன்றாக வதக்கி இறக்கவும்.

வதக்கிய பொருட்கள் ஆறியதும் தண்ணீர் விட்டு அரைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் அரைத்த விழுது, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

சூடாக இருக்கும்போதே மிளகுத்தூளைத் தூவிப் பரிமாறவும்.



Popular Feed

Recent Story

Featured News