Tuesday, September 11, 2018

ஆயிரம் கண்கொண்ட அழகான பூச்சி!





தும்பி, தட்டான்பூச்சி என்று பல பெயர்களில் வழங்கப்பட்டும் உயிரினம் குறித்த தகவல்கள்.
1. 5000 வகைகளுக்கும் அதிகமான தும்பிப் பூச்சிகள் இருக்கின்றன.

2. உலகில் காணப்படும் அழகான, வண்ணமயமான பூச்சிகளில் தும்பியும் ஒன்று. பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம் என்று பல வண்ணங்களில் இவற்றைக் காணலாம்.

3. அரை அங்குலம் முதல் ஐந்து அங்குலம் நீளம் வரை இவை பொதுவாகக் காணப்படும்.

4. தும்பிப் பூச்சிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு, கொசு மற்றும் அவற்றின் முட்டைகள். மற்ற வகையான பூச்சிகளையும் அவை உண்ணும்.

5. தும்பிகள் இரை பிடிப்பது மிகவும் அழகாக இருக்கும். கால்களைக் குவித்துக்கொண்டு பறந்துகொண்டே இருக்கும். திடீரென்று கீழே வந்து பூச்சியைப் பிடித்துக்கொண்டு சென்றுவிடும்.

6. தும்பிகள் அனைத்துப் பக்கமும் பார்க்க அவற்றுக்கு உதவுவது அவற்றின் பன்முகக் கண்கள். ஆயிரக்கணக்கான குட்டிக் குட்டிக் கண்களால் ஆனது தும்பியின் கண்கள்.



7. தும்பிகள் யாரையும் கடிக்கவோ, கொட்டவோ செய்யாது.

8. தும்பிகள் 300 மில்லியன் ஆண்டுகளாகவே பூமியில் இருக்கின்றன.

9. தும்பிகள் நேர்த்தியாகப் பறக்கக் கூடியவை. செங்குத்தாகக் கீழே வந்து இரையைப் பிடிக்கும். நடுவில் ஹெலிக்காப்டர் போல அந்தரத்தில் ஒரே இடத்தில் பறந்துகொண்டே இருக்கும். தும்பிகளால் பறக்க முடியாமல் போனால், அவை பசியால் இறந்துவிடும். காரணம், பறக்கும்போது மட்டுமே தும்பியால் இரையைப் பிடிக்க முடியும்.

10. வெவ்வேறு வகைத் தும்பிகள் சில வாரங்கள் முதல் ஒரு ஆண்டு வரை வாழும்.

Popular Feed

Recent Story

Featured News