Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 2, 2018

ஒரே நாளில் முதுகுவலி கழுத்து வலி எந்த வலியும் பறந்து போக.. இந்த ஒரு பூண்டு போதும்..!


நாம் வாழும் வாழ்க்கை முறையில் தற்போது மாறி வரும் உணவு கலாச்சார முறைகள், லைப்ஸ்டைல், வேலை பளு, தூக்கமின்மை, ஒரே இடத்தின் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது, நீண்ட தூராம் வாகனம் இயக்குவது என பல காரணங்களால், பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடுகிறது

அதில் குறிப்பாக உடலில் ஏற்படும் சில பல மாற்றங்கள் மற்றும் தொந்தரவுகள் முதுகுவலி கை வலி, கால் வலி என அனைத்தும் அடங்கும் இதனை போக்குவதற்கும், தடுப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

அதற்கு முன்னதாக, இளம் வயதினருக்கு கூட ஏற்படும் முதுகுவலி உள்ளிட்ட உடலில் ஏற்படும் வலிகளுக்கு என்ன நிவாரணம் உள்ளது என்பதை பார்க்கலாம். முதுகுவலி ஒரு காலத்தில் வயது முதிர்ச்சியின் காரணமாகவே வந்தது. ஆனால் இப்போதெல்லாம் மிக இளம் வயதிலேயே முதுகுவலி வந்துவிடுகிறது. இந்த கடுமையான முதுகுவலியின் காரணமாக, கனமான பொருள்களை தூக்கிச் செல்ல முடியாது. ஓரிடத்தில் அதிக நேரம் நிறகவோ உட்காரவோ முடியாமல் போகும். இதுவே 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், முதுகு, கை, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் மிகக் கடுமையான வலி உண்டாகும். இடுப்பு மூட்டுக்களில் உள்ள நரம்புகளில் கூட பிரச்னைகள் உண்டாகும்.

இதற்கு சிறந்த மருந்து....பூண்டு பால் பால் - 300 மில்லி பூண்டு - 8 முதல் 10 பற்கள் வரை (அளவைப் பொறுத்தது) அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து பால் பொங்கி, லேசாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பூண்டு பற்களை தோல் உரித்துவிட்டு தட்டி, கொதிக்கும் பாலில் போடு மீண்டும் மிதமான தீயிலேயே வைத்து பூண்டு நன்கு வேகும்வரையில், வைக வைத்துப் பின் இறக்க வேண்டும்.

பூண்டுப்பாலை தினமும் அதிகாலையில் அல்லது இரவு உணவுக்குப்பின் குடித்து வர இடுப்பு அல்லது முகுதுவலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே செல்வதை உணர்ந்து கொள்ள முடியும். இந்த பூண்டுப்பால் என்பது இடுப்பு மூட்டுக்களில் உள்ள வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்தும்.
இந்த பூண்டு பாலை தினமும் காலை அல்லது இரவு நேரத்தில் குடித்து வந்தால் உடலுக்கு நன்மை பயக்கும். நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும். மேலும் வயதானவர்களுக்கு மிக சிறந்த வலி நிவாரணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News