Thursday, September 13, 2018

நெட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம் அல்ல: தேசியத் தேர்வு முகமை

நெட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் அல்ல என தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு முதல் நெட், ஜே.இ.இ. நீட் போன்ற தேசிய அளவிலான ஜ்தேர்வுகளை நடத்த தனி அதிகாரம் கொண்ட என்.டி.ஏ. என்ற புதிய அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.



அதன்படி, 2019-ஆம் ஆண்டுக்கான நெட், ஜே.இ.இ. (மெயின்) தேர்வுகளுக்கான அறிவிப்பை அண்மையில் என்.டி.ஏ. வெளியிட்டது.
இதில், தேர்வுக்கான விண்ணப்பித்தில் ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பு ஒன்றை என்.டி.ஏ. செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது: நெட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கான அறிவிப்பில், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்போது செல்லத்தக்க ஏதாவது ஒரு அரசு அடையாள அட்டை எண் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. கடவுச் சீட்டு, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு எண் போன்ற ஏதாவது ஒரு அரசு அடையாள அட்டை எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News