Monday, September 17, 2018

"பற்களின் மஞ்சள் கறையை ஒரே நாளில் போக்க"இங்கே வாங்க!




முகத்திற்கு கண்கள் எவ்வளவு முக்கியமோ அதே போல் தான் பற்களும். சிலர் சிரிக்கும் போது அவர்களது பற்கள் வெண்மையாகவிருக்காது. முகம் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும் பற்கள் வெண்மையாக இல்லை என்றால் அதில் அழகு இருக்காது.

பற்களை வெண்மையாக்கவென கடைகளில் விற்கப்படும் பற்பசைகளில் இரசாயனம் கலந்துள்ளமையால் அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளது.இதனை நாம் வீட்டிலேயே இயற்க்கையான முறையில் பற்பசை தயாரிக்கலாம். அது பற்றி கீழே பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:

01. அரைக் கோப்பை தேங்காய் எண்ணெய்

02. 2 – 3 மேசைக் கரண்டி பேக்கிங் சோடா

03. 15 – 20 துளிகள் எசென்ஷயல் எண்ணெய்

04. ஸ்டேவியா 2 பக்கெட்



செய்முறை:

பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் எண்ணெய் மற்றும் ஏனைய பொருட்களை இட்டு முள்ளுக் கரண்டி ஒன்றின் உதவியுடன் அதனை நன்கு கலக்கவும். பின்னர் அதில் பற்தூரிகையை இட்டு வழமை போல் பல்துலக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் பற்களை வெண்மையாக்க முடியும்.

மேலும் பற் சுகாதாரத்திற்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்:

1. அழற்சி தடுக்கப்படும்

2. பற்கள் வெண்மையாகும்

3. தொண்டை வறட்சியடைவது தடுக்கப்படும்

4. பல் ஈறுகளை வலிமையாக்கும்

5. பற்களில் அழுக்கு தங்குவது தடுக்கப்படும்

6. வெடித்த உதடுகளுக்கு சிறந்த நிவாரணி

7. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்



மேற்கண்ட அனைத்தையும் செய்து வர ஒரு வாரத்தில் உங்கள் பற்களில் நல்ல முன்னேற்றத்தை பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Popular Feed

Recent Story

Featured News