திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(50). இவரது மனைவி வனிதா(45). மகள்கள் ஆனந்தி(19), அமுதா(18), மகன் மோகன்(15). கனிகிலுப்பை கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளி சத்துணவு மையத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த வனிதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
மனைவி இறந்த வேதனையில் வெங்கடேசனும் உடல்நலம் பாதிக்கப்பட்டு 2017ம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து ஆனந்தி, அமுதா, மோகன் மூவரையும் அவரது பாட்டி கூலிவேலை செய்து காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் 13ம்தேதி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம், ஆனந்தி கண்ணீர் மல்க மனு அளித்தார். குடும்பத்தை காப்பாற்றுவது உதவுங்கள். இல்லையென்றால் நானும், தங்கை, தம்பியும் இறப்பதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து கலெக்டர் கந்தசாமி அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். பணியின்போது உயிரிழந்த வனிதாவின் மகள் ஆனந்திக்கு வேலை வழங்க வேண்டும் என்றால் அவருக்கு வயது குறைவாக உள்ளது. இதுகுறித்து சென்னை அரசு செயலருடன் கலெக்டர் பேசினார்.
அப்போது ஆனந்தி, கல்வி தகுதி அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் பணி நியமனம் செய்ய அனுமதி கோரினார். மேலும் ஆனந்தி குடும்ப செலவிற்காக 2 மாதம் பணம் அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ஆனந்தியின் பாட்டி கீழே விழுந்ததில் அவரும் கடந்த மாதம் உயிரிழந்தார். ஆனந்தி தொலைதூர கல்வி படித்து வருகிறார். அதேபோல், தங்கை அமுதாவும் ஆரணியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று திடீரென ஆனந்தி வீட்டிற்கு வந்து கருணை அடிப்படையில் கனிகிலுப்பை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளர்களுக்கான பணி ஆணையை வழங்கினார்.மேலும் வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவினை அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
மேலும் ஆனந்தியின் வீடு விரிசல் ஏற்பட்டுள்ளதால், பசுமை வீடு கட்ட ஆணை வழங்கினார்.இந்நிகழ்வின்போது ஆரணி ஆர்டிஓ (பொறுப்பு) உமாமகேஸ்வரி, தாசில்தார் கிருஷ்ணசாமி, பிடிஓக்கள் திலகவதி, பாண்டியன், ஆர்ஐக்கள் தட்சிணாமூர்த்தி, தேவி மற்றும் வருவாய் துறையினர் இருந்தனர்.