Wednesday, September 26, 2018

அரசு உத்தரவை மீறி விடுமுறை நாட்களிலும் செயல்படும் பள்ளிகள்!

தமிழகம் முழுவதும் தற்போது காலாண்டு தேர்வுகள் முடிந்து
செப்.23 முதல் அக்.2 வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.



பள்ளி மாணவர்கள் மன ரீதியாக தங்களை தயார் படுத்திக்கொள்ள விடுமுறை நாட்களில், பள்ளிகள் மற்றும் வகுப்புகள் நடத்த கூடாது. இதை மீறி பள்ளிகள் நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆனால், பரமக்குடி கல்வி மாவட்டத்தில், பரமக்குடி, கமுதி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தது. பரமக்குடி பகுதியில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது.

மேலும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தினசரி பள்ளி நடைபெறுவது போன்று, காலை முதல் மாலை வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

அரசின் உத்தரவுகளை மீறி பள்ளிகள் நடத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யாமல் கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.



இதனால் மன அழுத்தத்தை குறைப்பதையும், புத்துணர்ச்சி அடையும் வாய்ப்புகளை இழந்து வருவதால் மன உளைச்சலுக்கு மாணவர்கள் உள்ளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து அரசு உத்தரவை மீறி செயல்படும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பரமக்குடி கல்வி மாவட்-்ட அலுவலர்களிடம் கேட்டபோது, ' அரசு உத்தரவை மீறி பள்ளிகள் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

Popular Feed

Recent Story

Featured News