Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 2, 2018

சர்க்கரை நோயாளிகள் பிரியாணி சாப்பிட்டால் என்னவாகும்னு தெரியுமா...?


ஒவ்வொருவரும் தினம்தோறும் பல வகையில் நமது உழைப்பை வெளிப்படுத்துகின்றோம். ஒவ்வொரு மனிதனும் உழைப்பை எவ்வளவு செலவிடுகின்றனரோ அதே அளவிற்கு அதற்கான பலனை பெருகின்றனரா..? என்பது கேள்விக்குறியான விஷயம்தான். 



இருப்பினும் நாம் இவ்வளவு உழைப்பை போடுவது எதற்காக என்பதை நன்கு சிந்திக்க வேண்டும். நாம் அன்றாடம் உழைக்க முக்கிய காரணமாக இருப்பது உணவு மட்டும்தான். மற்ற காரணிகளை காட்டிலும் உணவே பிரதான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், இன்று நமக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிடாமல் அவற்றை வெறுத்து ஒதுக்கி தள்ளுகின்றோம். 

இந்த நிலைக்கு காரணம் ஏராளமான நோய்களின் தாக்கமே...! அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் பிரியாணியை சாப்பிடலாமா என்பதை பற்றிய முழு மருத்துவ குறிப்பையும் இந்த பதிவில் தெரிந்து கொண்டு நலம் பெறுவோம்.

பிரியாணி பிரியர்கள்..! பிரியாணி என்றவுடனே அதற்கென்று ஒரு தனி படையே கிளம்பி வந்துவிடும். இந்த பிரியாணிக்கு அவ்வளவு காதலர்கள் என்பதே நிதர்சனமான ஒன்றாகும். சில ஊர்கள் பிரியாணிக்காகவே மிகவும் பிரசித்தி பெற்று திகழ்கின்றது. ஆம்பூர் பிரியாணி முதல் ஹைதராபாத் பிரியாணி வரை இவற்றின் ருசியும் மணமும், வேறு எந்த உணவு வகையாலும் அடித்து கொள்ளவே முடியாது. 



பொதுவாக பிரியாணியில் பல விதமான வகைகள் உள்ளன. வகை வகையான பிரியாணிகள்..! எந்த ஒரு உணவு வகையாக இருந்தாலும் அதற்கென்று ஒரு பட்டியலே இருக்கும். குறிப்பாக ஒரு உணவு அனைவருக்கும் பிடிக்கும் என்றால் அதில் பலவித வகைகளை கொண்டு வந்து விடுவார்கள். பிரியாணியின் வகைகளை இனி அறிந்து கொள்வோம்... - சிக்கன் பிரியாணி - மட்டன் பிரியாணி - முட்டை பிரியாணி - இறால் பிரியாணி - மீன் பிரியாணி - பீஃ பிரியாணி - காடை பிரியாணி அனைவரின் முதல் சாய்ஸ்..! சிக்கன் பிரியாணி பல ஊட்டசத்துக்களை கொண்டுள்ளது. 

இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு தேவையான ஒன்றாகும். 250 gm எடையுள்ள சிக்கனில் உள்ள ஊட்டசத்துக்கள் இவையே... கலோரிகள் 739.46 Kcal புரதசத்து 28.89 gm சோடியம் 1190.58 mg பொட்டாசியம் 507.99 mg. இரும்புசத்து 2.58 கால்சியம் 44.37 mg ஜின்க் 2.75 நிறையுற்ற கொழுப்புகள் 5.95 gm கொழுப்புகள் 32.64 gm சிக்கன் பிரியாணியும் நீரிழிவும்..! பொதுவாக மற்ற பிரியாணி வகைகளை காட்டிலும் பெரும்பாலான மக்களுக்கு பிடித்தமான பிரியாணி சிக்கன்தான். சிக்கனில் ருசியும், இதன் குறைவான விலையும்தான் சிக்கன் பிரியாணியின் ரகசியம். 

ஆனால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததா..? என்ற கேள்விக்கு பதில்... ஆம் என்பதே. சிக்கன் பிரியாணி சாப்பிடுவது முக்கியமில்லை அது எப்படிப்பட்ட சிக்கன் என்பதுதான் முக்கியமே..! எந்த சிக்கன் நல்லது..? உணவை சாப்பிடுவதை விட அவை நல்ல முறையில் உற்பத்தி செய்யப்பட்டதா என்பதை நன்கு ஆராய வேண்டும். அந்த வகையில் சிக்கனானது ஊசி செலுத்தி, வேதி பொருட்களை உட்கொண்டதாக இருத்தல் கூடாது. முற்றிலுமாக இயற்கை ரீதியாக உற்பத்தி செய்யப்பட்ட கோழிகளையே (நாட்டு கோழிகள்) பிரியாணியில் சமைத்து சாப்பிட வேண்டும். அத்துடன் வேக வைத்த சிக்கனே சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கவனம் தேவை..! சிக்கன் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கின்றதே என உங்கள் இஷ்டத்துக்கு சாப்பிட்டு விடாதீர்கள். குறைந்த அளவே சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிட வேண்டும். சிக்கனில் அதிக அளவில் செலினியம் உள்ளதால் இது உடலுக்கு நன்மைதான். இருப்பினும் உட்கொள்ளும் அளவு மிக முக்கியம் நண்பர்களே. அத்துடன் அதிகமான அளவில் எண்ணெய்யை உபயோகிக்காமல் பிரியாணி செய்து சாப்பிட்டால் நலம் பெறலாம்.

சிறந்த முறை இதுவே..! சிக்கன் பிரியாணியை தினந்தோறும் சாப்பிட கூடாது. வாரத்திற்கு ஒரு முறை குறைவான அளவில் சாப்பிடலாம். எப்போதும் குறைந்த கொலெஸ்ட்ரோல் உள்ள எண்ணையையே பயன்படுத்துங்கள். பிரியாணியை பிரௌன் பாஸ்மாதி அரிசியை கொண்டே தயார் செய்யுங்கள். இதுதான் மற்றவற்றை காட்டிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்ததாகும். சாப்பிட்ட பிறகு ஒரு மூலிகை டீ குடிப்பது நன்று. சிவப்பு இறைச்சி எப்படி..? பொதுவாக பிரியாணியை பல வித சிவப்பு இறைச்சிகளை கொண்டும் தயார் செய்வார்கள். 



ஆடு, மாடு, பன்றி, செம்மறி ஆடு போன்றவற்றை சிவப்பு இறைச்சி என்பார்கள். அந்த வகையில் ஆட்டு இறைச்சியே நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாகும். இவற்றில் பலவித சத்துக்கள் உள்ளன. இரும்புசத்து, ஜின்க், பாஸ்பரஸ், வைட்டமின் பி12, ரோபோபிளவின் போன்றவை நிறைந்துள்ளது. மட்டன் பிரியாணி சரிதானா..? 2 வாரத்திற்கு ஒரு முறை குறைந்த அளவு மட்டன் பிரியாணியை சாப்பிடுவது உடலுக்கு நல்லதே. 

இருப்பினும் உங்கள் மருத்துவரை அணுகி உங்கள் சர்க்கரை அளவிற்கு எவ்வளவு இதனை சாப்பிடலாம் அல்லது சாப்பிடவே கூடாத என்பதை கேட்டு கொள்ளுங்கள். ஊட்டசத்துக்கள் அதிகம் இதில் இருந்தாலும் கொழுப்பு மற்றும் கார்ப்ஸ் பற்றி நாம் யோசிக்க வேண்டும் நண்பர்களே. உணவே மருந்து...! பிரியாணியை சாப்பிடுவது முக்கியம் இல்லை. அவற்றின் அளவும், செய்ய கூடிய இறைச்சியும் மிக முக்கியம். 

பதப்படுத்தப்படாத இறைச்சியே எப்போதும் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது. மேலும் செரிமானம் ஆகக்கூடிய மசாலா பொருட்களை பயன்படுத்தி இதனை தயாரிக்க வேண்டும். முக்கியமாக எப்போதும் மருத்துவரின் ஆலோசனை பெற்றே பிரியாணியை சாப்பிட வேண்டும்.

Popular Feed

Recent Story

Featured News