Thursday, September 27, 2018

ஊதியம் பெறுவதில் ஏமாற்றப்படும் பெண்கள்!





2017ஆம் ஆண்டில் இந்தியாவின் பாலின ஊதிய இடைவெளி 20 விழுக்காடாக இருந்ததாக ஆய்வு ஒன்று கூறுகிறது.


இந்தியாவில் 2017ஆம் ஆண்டில், பணியின் ஆரம்பக் காலங்களில் பாலின ஊதிய இடைவெளி மிகவும் குறுகியதாக இருந்ததாகவும், ஒட்டுமொத்த பாலின ஊதிய இடைவெளி 20 விழுக்காடாக இருந்ததாகவும் மான்ஸ்டர் ஊதியக் குறியீடு அறிக்கை கூறுகிறது. இரண்டு ஆண்டு வரையில் அனுபவம் பெற்ற ஆண்களின் சராசரி ஊதியம், பெண்களின் ஊதியத்தை விட 7.8 விழுக்காடு கூடுதலாக இருந்துள்ளது. மேலும், 6 முதல் 10 ஆண்டு வரை அனுபவம் பெற்ற ஆண்களின் சராசரி ஊதியம், பெண்களின் ஊதியத்தை விட 15.3 விழுக்காடு கூடுதலாக இருந்துள்ளது. 11 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்ற ஆண்களின் சராசரி ஊதியம், பெண்களின் ஊதியத்தை விட 25 விழுக்காடு கூடுதலாக இருந்ததாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.



இளங்கலைப் பட்டம் பெற்ற ஆண்களின் சராசரி ஊதியம் 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் பெண்களை விட 16 விழுக்காடு கூடுதலாக இருந்துள்ளது. முதுகலைப் பட்டம் பெற்ற ஆண்களின் ஊதியமோ இன்னும் அதிகமாக இருந்திருக்கிறது. நான்கு அல்லது ஐந்து ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்ற அல்லது அதற்கு இணையான முதுகலைப் பட்டம் பெற்ற ஆண்களின் சராசரி ஊதியம் பெண்களின் ஊதியத்தை விட 33.7 விழுக்காடு கூடுதலாக இருந்துள்ளது. இந்தக் குழுவினரின் பாலின ஊதிய இடைவெளி 2017ஆம் ஆண்டில் 40 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News