Thursday, September 13, 2018

பாம்பு கடிக்கு குறைந்த விலை மருந்து : டில்லி ஐ.ஐ.டி., மாணவர்கள் கண்டுபிடிப்பு

ஐ.ஐ.டி., மாணவர்கள், அமெரிக்காவின் சான் ஜோஸ்
பல்கலையுடன் இணைந்து, பாம்பு கடிக்கு, குறைந்த விலையில் மருந்து தயாரித்துள்ளனர்.

உலகம் முழுவதும், ஆண்டுக்கு, 20 லட்சம் பேர், பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர். அதில், 10லட்சம் பேர் இறந்து விடுகின்றனர். நம் நாட்டில் ஆண்டுக்கு, 1 லட்சம் பேர், பாம்பு கடியால் இறப்பதாக, உலக சுகாதார நிறுவன ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.இந்தியாவில், பாம்பு விஷத்தை முறிக்கும் மருந்துகள், அரசு மருத்துவமனைகளில் தான், பெரும்பாலும் வழங்கப்படுகின்றன.



இது குறித்து, டில்லியில் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் ஆராய்ச்சி மாணவர், அனுராக் தாக்கூர் கூறியதாவது: பாம்பு கடிக்கு மிக குறைந்த விலையில், தட்டுப்பாடு இன்றி மருந்து கிடைக்க வேண்டும் என, டில்லி, ஐ.ஐ.டி., முடிவு செய்தது. இதையடுத்து, அமெரிக்காவின், சான் ஜோஸ் பல்கலையுடன் இணைந்து, ஐ.ஐ.டி., மாணவர்கள் ஆராய்ச்சி செய்தனர்.

தற்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ள விஷ முறிவு மருந்து, விலை மிக குறைவு என்பதுடன், அதை தயாரிப்பதற்கும் எளிமையான முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், தட்டுப்பாடு இன்றி, குக்கிராமம் உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும், இந்த மருந்தை, இருப்பு வைக்கும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.



Popular Feed

Recent Story

Featured News