Friday, September 21, 2018

பழத்திலேயே முதன்மையானது என அகத்தியர் மருத்துவம் சொல்லும் பழம் இதுதான்... ஏன் தெரியுமா?






பழத்திலேயே முதன்மையானது விளாம்பழம்தான் என அகத்தியர் சொல்லக் காரணம் என்ன தெரியுமா? விளாம்பழம் மிக மலிவாகக் கிடைக்கக்கூடிய ஆனால் அதீத மருத்துவ குணங்கள் கொண்ட பழங்களில் ஒன்று.


அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.இந்த பழத்தை தொடர்ந்து இருபத்தோரு நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால், வாதம், பித்தம் தொடர்புடைய அத்தனை நோய்களையும் தீர்க்கும் சக்தி கொண்டது. அதனுடைய மற்ற மருத்துவ குணங்கள் பற்றி இங்கே காண்போம்.



ஊட்டச்சத்துக்கள்
விளாம்பழம் பல நோய்களைக் குணப்படுத்தும் சிறந்த பழம். அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, விளாம்பழத்தில் அதிக அளவில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருக்கின்றன. வைட்டமின் ஏ அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.

பித்த வாந்தி
தலைவலி, லேசாக கண்பார்வை மங்குவது போன்று இருத்தல், காலையில் எழுந்ததும் பித்தத்தால் மஞ்சள் நிறமாக வாந்தி எடுத்தல், வாய் கசப்பாகவே இருத்தல், பித்தத்தால் வரும் கிறுகிறுப்பு, உள்ளங்கை மற்றும் கால்களில் அதிகப்படியாக வியர்வை உண்டாதல், பித்தத்தால் வரும் இளநரை, நாக்கு மரத்துப் போதல் போன்ற பித்தத்தால் ஏற்படுகிற பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக இந்த விளாம்பழம் இருக்கும்.



Popular Feed

Recent Story

Featured News