Wednesday, September 5, 2018

கூகுள் வெளியிட்டு ஆசிரியா் தினத்தை பெருமைப் படுத்தும் கூகுள்

google doodle celebrates teachers day 2018




ஒவ்வொரு ஆண்டும் டாக்டா்.ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5ம் தேதி ஆசிரியா் தினம் கொண்டாடப்படும் நிலையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு ஆசிாியா் தினத்தை பெருமைப்படுத்தி உள்ளது.


ஆசிரியா் பணியை சேவையாக கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியா் தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வாறு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மாபெரும் தத்துவ மேதையாக இருந்தார். இவரை கௌரவப்படுத்தும் வகையில், கடந்த 1962ஆம் ஆண்டு முதல் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

அதன்படி இன்று நாடு முழுவதும் ஆசிரியா் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் சிறந்த ஆசிரியா்களை கௌரவிக்கும் வகையில் பரிசுகளை வழங்கி வருகிறது. பள்ளி, கல்லூாி மாணவா்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஆசிாியா் தினத்தின் போது கட்டுரை போட்டி, கவிதை போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.



மேலும் ஆசிரியா் தினத்தை மேலும் பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு ஆசிாியா் தினத்தை கொண்டாடுகிறது.

Popular Feed

Recent Story

Featured News