Thursday, September 13, 2018

அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு; நவம்பர் முதல் கம்ப்யூட்டர் மயம் !

அரசு பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் குறித்த திறனூட்டல் பயிற்சி நடந்தது.



"தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் ஜவஹர் தலைமை வகித்து பேசியதாவது"

கருவூலம் மற்றும் கணக்குத் துறை 1962ம் ஆண்டு முதல், தனித் துறையாக செயல்பட்டு வருகிறது.

தற்போதுள்ள நடைமுறைப்படி, கருவூலகத்தில் பட்டியல் சமர்ப்பித்த, 10 நாட்களுக்கு பிறகே, பயனாளிகளுக்கான தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

புதியதாக உருவாக்கப்படும் நேரடி இணைய வழி பட்டியல் சமர்ப்பிக்கும் திட்டத்தின் மூலம், கருவூலகத்தில் பட்டியல் சமர்ப்பித்த நாளிலேயே, தொகை வரவு வைப்பதற்கான வாய்ப்பும், காகித பயன்பாடு குறைவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு பரிவர்த்தனையின் பல்வேறு நிலைகள் கண்காணிக்கப்படுவதால், சிறப்பாக நிர்வகிக்க வழி வகுக்கப்படுகிறது.



கம்ப்யூட்டர் மூலமான பயன்பாடு முறைப்படுத்தப்படுவதால், மனிதவள பயன்பாட்டில் ஏற்படும் தவறுகள், முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

நவம்பர் மாதம் முதல் பயன்பாட்டு வரும் புதிய திட்டத்தால், தமிழகத்தில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் பணி பதிவேடு பராமரிப்பு எளிமையாக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

Popular Feed

Recent Story

Featured News