Tuesday, September 11, 2018

பெற்றோர்கள் தங்கள் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்

ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசை, கனவு இருக்கும். அதை கண்டறிந்து மெருகூட்டுவதுதானே பெற்றோர்களின் கடமை.



பெற்றோர்-பிள்ளை உறவுதான் இன்றைக்கு தடம் மாறி செல்லும் முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது. அதீத கண்டிப்பு, அதீத கண்டிப்பின்மை இரண்டுமே தவறானதுதான்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசை, கனவு இருக்கும். அதை கண்டறிந்து மெருகூட்டுவதுதானே பெற்றோர்களின் கடமை. அதைவிடுத்து இதற்கு மாறான பல செயல்பாடுகளை இன்றைக்கு பெற்றோர்களாகிய நாம் செய்துவருகிறோம். குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள்.

நாம் அன்பைக் காட்டினாலும், தவறைக் காட்டினாலும் அதனை அச்சுப்பிசராமல் அப்படியே செய்வார்கள். பிள்ளை என்னவாக ஆகவேண்டும் என்பதை பெற்றோர் முடிவுசெய்வது, அதற்காக பிள்ளைகளுக்கு அதிக நேரம் படிப்பை சுமையாக சுமத்துவது, மற்றொரு பிள்ளையோடு ஒப்பீடு செய்வது, பொருளாதார வசதி இருக்கிறது என்பதற்காக பிள்ளைகளைக் கண்டுக்கொள்ளாமலேயே பணத்தை மட்டும் கொடுத்து நல்வழிப்படுத்தாதது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத்தான் அனைத்து பெற்றோர்களும் செய்துவருகிறோம்.



இதுவரை தெரிந்தோ, தெரியாமலோ செய்தது போதும். இனியாவது குழந்தைகளின் நலனில் உண்மையான அக்கறையுள்ள பெற்றோராக நடந்துகொள்வோம்.

Popular Feed

Recent Story

Featured News