நாமக்கல், செப். 28:பள்ளிகள் திறக்கும் முன்பே, காலாண்டு தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்த அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், காலாண்டு தேர்வு, கடந்த 22ம் தேதி முடிவடைந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், காலாண்டு தேர்வு, கடந்த 22ம் தேதி முடிவடைந்தது.
ஒரு வாரம் விடுமுறைக்கு பின், பள்ளிகள் வரும் 3ம் தேதி திறக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று (28ம் தேதி) காலை 11 மணிக்கு, நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு தேர்ச்சி பகுப்பாய்வு கூட்டம் சிஇஓ உஷா தலைமையில் நடக்கிறது. இதற்கு வரும்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது