Saturday, September 15, 2018

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் செய்யக்கூடாதவைகள் என்ன...?

சர்க்கரை நோயாளிகள் முதலில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உணவுக் கட்டுப்பாடு தான். அதில் மிக கவனமாக இருந்தாலே போதும்.




நீரிழிவு நோயை மிக எளிமையாக விரட்டியடிக்க முடியும். அப்படி நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் செய்யவே கூடாத விஷயங்கள் சில உள்ளன. அவை என்னென்ன என்று தெரிந்து கொண்டு கடைபிடித்து வருவது மிக அவசியம்.

சர்க்கரை நோய்யுள்ளவர்கள் பக்கவாதம் மற்றும் இருதய நோயினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கார்போஹெட்ரேட் தவிர்பது போலவே கொழுப்பு உணவுகளிலும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் சாச்சுரேடட் ஃபெட், ஃபுல் ஃபெட் பால் பொருட்கள், கீரிம் கொண்ட சாஸ் வகைகள், சாக்லேட், வெண்ணெய், ஹம்பெர்க் ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.



எளிதில் கரையக்கூடிய சர்க்கரை மூலக்கூறுகளான ஃப்ரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றை சர்க்கரை நோயளிகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை குளிர்பானங்கள், இனிப்பு வகையான டெசர்ட்கள், பல பழங்களின் சாறுகள் மற்றும் இதர பானங்களில் உள்ளது. பானங்களில் அதன் உள்ளடக்கத்தைப் படித்து தெரிந்த பின் அருந்தவும். காய் சாறுகள் மற்றும் சர்க்கரை இல்லா உணவுகள் நன்மையே தரும்.

உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அது மட்டுமல்ல, சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம் என்றாலும் கூட, அதி தீவிரமான உடற் பயிற்சியும் உங்களுடைய நிலைமையை மிக மோசமான மாற்றிவிடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்



Popular Feed

Recent Story

Featured News