Wednesday, September 12, 2018

வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு!!!




மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து கடுமையாக சரிந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக வர்த்தக போர் ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது.

நேற்றைய வர்த்தக நேர முடிவில் 72.69 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, இன்று (செப்.,12) வர்த்தகம் துவங்கிய போது (காலை 9.15 மணியளவில்) 72.80 ஆனது. சிறிது நேரத்தில் காலை 9.30 மணியளவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்து 72.91 என்ற நிலையை எட்டியது.



2018 ம் ஆண்டு துவங்கியது முதல் தற்போது வரை சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 13.81 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News