Sunday, September 23, 2018

உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம்





உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் என்னும் திட்டத்தை பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று துவக்கி வைத்தார். மேலும் 10 சுகாதார மையங்களையும் அவர் துவக்கி வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய மோடி, இன்று ஜார்கண்ட் மட்டுமல்ல நாட்டின் அனைத்து குடும்பங்களின் கனவுகளையும் நான் நிறைவேற்றி உள்ளேன். இன்று துவங்கப்பட்டுள்ள கனவுத்திட்டத்தின் மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டங்கள் கிடைத்துள்ளது. 

உலகின் வேறு நாட்டிலும் இல்லாத அளவிற்கு அனைத்து குடும்பங்களையும் உள்ளடக்கியதாக இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் இருக்கும்.முன்னோடி திட்டமாக அமையும் இந்த திட்டம் மற்ற நாடுகளை சிந்திக்க வைக்கும். 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவர்.



நாட்டின் ஏழைகளுக்காக சேவையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அடுத்த 6 மாதங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு மேலும் பல திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவினை மத்திய அரசு ஏற்கும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இதன் மூலம் கிசிச்சை பெற முடியும். இத்திட்டத்திற்காக ரூ.10,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.



Popular Feed

Recent Story

Featured News