அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும்சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைனில் (www.scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம்.
இஸ்லாமிய, கிறிஸ்தவர், சீக்கியர், புத்த, பார்சி, ஜெயின் மதங்களை சேர்ந்த ஒன்று முதல் 10ம் வகுப்பு பயில்வோருக்கு பள்ளி படிப்பு கல்வி உதவிதொகையும், 11 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்வோருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, தொழிற்கல்வி பயில்வோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.செப்.,30க்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதவிறக்கம் செய்து போட்டோ, தேவையான கல்வி சான்று நகல்களை இணைத்து கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிலையங்கள் அவற்றை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.